புறநானூறு
பாடல் எண் 86
( to see the meaning move the cursor over the word )
சிற்றில்
நற்றூன்
பற்றி நின்மகன்
யாண்டுள னோ?என
வினவுதி,
என்மகன்
யாண்டு உளன் ஆயினும்
அறியேன், ஓரும்
புலிசேர்ந்து போகிய
கல்அளை போல
ஈன்ற வயிறோ
இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
|
திணை : வாகை, துறை : ஏறான் முல்லை
காவற்பெண்டின் பாட்டு. இவர் பெயர் காதற்பெண்டென்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. செவிலித்தாயைக் காவற் பெண்டென்பதும் வழக்கு.
காவற் பெண்டென்பவர் சிறந்த மறக்குடியில் பிறந்து வளர்ந்து மறக்குடியில் வாழ்க்கைப் பட்டவர். இனிய செய்யுள் செய்யும் சிறப்புடையவர். இவருக்கு மறம் மிக்க மகனொருவன் இருந்தான். ஒரு சால்புடையை மகள் அவர் மனைக்கு ஒருநாள் போந்து அன்னே நின் மகன் யாண்டுளன்? என வினவினாள். அக்காலை, அவர் அவன் போர்க்களத்தே விளங்கித் தோன்றுவன், அவற்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் அதன் குகைக்கும் உள்ள தொடர்பாகும். அவனை ஈன்ற வயிறோ இது - எனத் தம் வயிற்ளைக் காட்டியுரைத்தார். அவ்வுரையே இப்பாட்டு.
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|