புறநானூறு
பாடல் எண் 192


புறநானூற்றுப் பாடல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டியென இப்பொழுது வழங்கும் ஊரே பண்டைநாளிலும் இடைக்காலத்திலும் பூங்குன்றம் என்று வழங்கப்பட்டது. இவ்வூரில் வாழ்ந்த கணியன் பூங்குன்றனார் எத்தகைய வேந்தரையும் வள்ளல்களையும் பாடாது இருந்தார். இதனைக் கண்ட சான்றோர்களுக்கே வியப்புண்டாயிற்று. நீர் ஏன் எவரையும் பாடுவதில்லை என்று வினவ அவர் கீழ்க்காணும் பாடலை பாடியுள்ளதாக அறிகிறோம்.

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

௧௯௨


யாதுமூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனி தென
மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தைலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉ புணை போலாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை
வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே


( பாடலின் விளக்கம் )



பூங்குன்றனார், எங்குசென்றாலும் எமது ஊர்தான். எல்லா இடத்தும் எம் சுற்றத்தவர் உள்ளனர் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறியது இன்று மெய்யாகி வருகிறது. பூமிப்பந்தின் எந்த இடத்திலும் எம் தமிழர் இல்லாத இடமே இல்லை. பெரியோரைப் பாடுவதைவிட சிறியோரை இகழாது இருப்பது மேல் என்ற உயர்ந்த நோக்கொடு வாழ்ந்த வாழ்க்கையை எண்ணும் பொழுது நம் உள்ளமெலாம் உவகை மேலிடுகிறது.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,