புறநானூறு
பாடல் எண் 171
புறநானூற்றுப் பாடல்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பிட்டங்கொற்றன் என்ற மன்னனைக் கண்ட பொழுதெல்லாம்
அவர் கேட்கும் அனைத்தையும் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவனாக பிட்டங்கொற்றன் இருந்து வந்தான்.
இதனால் மன்னன் மீது பெருமதிப்புக் கொண்ட புலவர் மகிழ்ந்து பாடியதாக இப்பாடல் உள்ளது.
|
( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )
௧எ௧
|
இன்று செலினுந் தருமே
சிறுவரை
நின்று செலினும் தருமே
பின்னும்
முன்னே தந்தென னென்னாது
துன்னி வைகலுஞ் செலினும்
பொய்யல னாகி
யாம் வேண்டியாங்கெம் வறுங்கல நிறைப்போன்
தான் வேண்டியாங்குத்
தன்னிறை யுவப்ப
அருந்தொழின் முடியரோ
திருந்துவேற் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலங் களிற்றொடு வேண்டினும்
பெருந்தகை
பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே
அன்ன னாகலி
னெந்தை யுள்ளடி
முள்ளு நோவ வுறாற்க தில்ல
ஈவோ ரரியவிவ் வுலகத்து
வாழ்வோர் வாழ
வவன் றாள்வா ழியவே
|
( பாடலின் விளக்கம் )
இன்றும் தருவான், நாளையும் தருவான், என்றும் தருவான். கேட்டதெல்லாம் கொடுப்பான். நெற்குவை
வேண்டினும். களிறு வேண்டினும், பொற்குவை வேண்டினும் இல்லையென்னாது தரும் தன்மையுடையவனாகப்
பிட்டங் கொற்றன் இருந்து வந்தான் என்பதனை இப்பாடல் உணர்த்துகிறது.
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|