பட்டணத்தார் பாடல்கள்
உடற்கூற்றுவண்ணம்

தன தன தான, தன தன தான,
தந்த தனந்தன தந்த தனந்த
தனனதனந்த, தனனதனந்த,
தானனதானன தானதனந்த.


ஒருமடமாதுமொருவனுமாகி,
இன்பசுகந்தருமன்புபொருந்தி
யுணர்வுகலங்கிஒழுகியவிந்து,
வூறுசுரோணிதமீதுகலந்து.
பனியிலொர்பாதிசிறுதுளிமாது,
பண்டியில்வந்துபுகுந்து திரண்டு,
பதுமவரும்புகமடமிதென்று,
பார்வைமெய்வாய்செவிகால் கைகளென்ற.
உருவமுமாகியுயிர்வளர்மாத,
மொன்பதுமொன்றுநிறைந்துமடந்தை
யுதரமகன்றுபுவியில்விழுந்து,
யோகமும்வாரமுநாளுமறிந்து,
மகளிர்கள்சேனைதரவணையாடை,
மண்படவுந்தியுதைந்துகவிழ்ந்து
மடமயில்கொங்கையமுதமருந்தி,
யோரறிவீரறிவாகிவளர்ந்து.
ஒளிநகையூறலிதழ்மடவாரு,
வந்துமுகந்திடவந்துதவழ்ந்து
மடியிலிருந்துமழலைமொழிந்து,
வாவிருபோலெனநாமம்விளம்ப.
உடைமணியாடையரைவடமாட,
வுண்பவர்தின்பவர்தங்க ளொடுண்டு,
தெருவிலிருந்து புழுதியளைந்து,
தேடியபாலரொடோடிநடந்து
அஞ்சுவயதாகிவிளையாடியே.

------------------------

உயர்தருஞானகுருஉபதேச,
முந்தமிழின்கலையுங்கரைகண்டு
வளர்பிறையென்றுபலரும்விளம்ப,
வாழ்பதினாறுபிராயமும்வந்து.
மயிர்முடிகோதியறுபதநீல,
வண்டிமிர்தண்டொடைகொண்டைபுனைந்து,
மணிபொனிலங்குபணிகளணிந்து,
மாகதர்போகதர்கூடிவணங்க.
மதனசொரூபனிவனெனமோக,
மங்கையர்கண்டுமருண்டுதிரண்டு,
வரிவிழிகொண்டுசுழியவெறிந்து,
மாமயில்போலவர்போவதுகண்டு.
மனதுபோறாமலவர்பிறகோடி,
மங்கலசெங்கலசந்திகழ்கொங்கை
மருவமயங்கியிதழமுதுண்டு,
தேடியமாமுதல்சேரவழங்கி,
ஒருமுதலாகிமுதுபொருளாயி,
ருந்ததனங்களும்வம்பிலிழந்து
மதனசுகந்தவிதனமிதென்று,
வாலிபகோலமும்வேறுபிரிந்து.
வளமையுமாறியிளமையும்மாறி,
வன்பல்விழுந்திருகண்களிருண்டு
வயதுமுதிர்ந்துநரைதிரைவந்து,
வாதவிரோதகுரோதமடைந்து.
செங்கையினி லோர்தடியுமாகியே.

------------------------

வருவதுபோவதொருமுதுகூனு,
மந்தியெனும்படிகுந்திநடந்து
மதியுமழிந்துசெவிதிமிர்வந்து,
வாயறியாமல்விடாமன்மொழிந்து.
துயில்வருநேரமிருமல்பொறாது,
தொண்டையு நெஞ்சுமுன்வந்துவறந்து,
துகிலுமிழந்துசுணையுமழிந்து,
தோகையர் பாலர்ககோரணிகொண்டு.
கலியுகமீதிலிவர்மரியாதை,
கண்டிடுமென்பவர்சஞ்சலமிஞ்ச
கலகலவென்றுமலசலம்வந்து,
கால்வழிமேல்வழிசாரநடந்து.
தெளிவுமிராமலுரைதடுமாறி,
சிந்தையுநெஞ்சுமுலைந்துமருண்டு
திடமுமலைந்துமிகவுமலைந்து,
தேறிகலாதரவேதெனநொந்து.
மறையவன்வேதனெழுதியவாறு,
வந்ததுகண்டமுமென்றுதெளிந்து
இனியெனகண்டமினியெனதொந்த,
மேதினிவாழ்வுநிலாதினிநின்று
கடன்முறைபேசுமெனவுரைநாவு,
றங்கிவிழுந்துகைகொன் மொழிந்து,
கடைவழிகஞ்சியொழுகிடவந்து,
பூதமுநாலுசுவாசமும்நின்று.
நெஞ்சுதடுமாறிவருநேரமே.

------------------------

வளர்பிறைபோலவெயிறுமுரோம,
முஞ்சடையுஞ் சிறுகுஞ்யும்விஞ்ச,
மனதுமிருண்டவடிவுமிலங்க,
மாமலைபோல் யமதூதர்கள்வந்து.
வலைகொடுவீசியுயிர்கொடுபோக,
மைந்தரும்வந்துகுனிந்தழநொந்து
மடியில்விழுந்துமனைவிபுலம்ப,
மாழ்கினரெயிவர்காலமறிந்து.
பழையவர்காணுமெனுமயலார்கள்,
பஞ்சுபறந்திடநின்றவர்பந்த
ரிடுமெனவந்துபறையிடமுந்த,
வேபிணம்வேகவிசாரியுமென்று.
பலரையுமேவிமுதியவர்தாமி,
ருந்தசவங்கழுவுஞ்சிலரென்று
பணிதுகில்தொங்கல்களபபணிந்து,
பாவகமேசெய்துநாறுமுடம்பை.
வரிசைகெடாமலெடுமெனவோடி,
வந்திளமைந்தர்குனிந்துசுமந்து
கடுகிநடந்துசுடலையடைந்து,
மாநுடவாழ்வெனவாழ்வெனநொந்து.
விறகிடைமூடியழல்கொடுபோட,
வெந்துவிழுந்துமுறிந்துநிணங்க
ளுருகியெலும்புகருகியடங்கி,
யோர்பிடிநீறுமிலாதவுடம்பை,
நம்புமடியேனையினியாளுமே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,