சூடாமணி நிகண்டு
மரப்பெயர்த் தொகுதி

ஐந்தருவாவன

சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம்

சந்தனமரத்தின் பெயர்

சந்து, ஆரம், சாந்து, சாந்தம், சந்திரதிலகம், படீரம், மலயசம்

கற்பகதருவிற்படர் கொடியின் பெயர்

காமவல்லி

அகிலின் பெயர்

அகரு, காகதுண்டம், பூழில்

பாதிரிமரத்தின் பெயர்

புன்காலி, பாடலம்

மகிழமரத்தின் பெயர்

வகுளம், இலஞ்சி, கேசரம்

கோங்குமரத்தின் பெயர்

துருமோற்பலம், கன்னிகாரம்

சண்பகமரத்தின் பெயர்

சம்பகம்

புன்னை மரத்தின் பெயர்

புன்னாகம், நாகம்

சுரபுன்னையின் பெயர்

வழை

நாரத்தையின் பெயர்

நரத்தம், நாரம், நாரங்கம்

குருக்கத்தியின் பெயர்

குருகு, நாகரி, வாசந்தி, மாதவி

சிறுசண்பகத்தின் பெயர்

சாதி, மாலதி

பித்திகையின் பெயர்

கருமுகை,

மஞ்சாடியின் பெயர்

திலகம்

மகரவாழையின் பெயர்

மருகு

வனமல்லிகையின் பெயர்

மெளவல்

மல்லிகையின் பெயர்

பூருண்டி, மாலதி, அனங்கம்

காயாவின் பெயர்

அல்லி, புன்காலி, காசை, அஞ்சனி, பூவை

வெட்சியின் பெயர்

குல்லை, செச்சை, சிந்தூரம்

துளசியின் பெயர்

குல்லை, துளவு, துழாய், வனம்

செருந்திமரத்தின் பெயர்

செங்கோடு, பஞ்சரம்

அழிஞ்சிலின் பெயர்

அங்கோலம், சே, சேமரம்

குங்குமமரத்தின் பெயர்

துருக்கம், மரவம்

அனிச்சமரத்தின் பெயர்

அருப்பலம், நறவம், சுள்ளி.

அலரியின் பெயர்

கரவீரம், கவீரம், கணவீரம்

மருக்கொருந்தின் பெயர்

தமனகம்

இருவேலியின் பெயர்

மூலகந்தம், வேரி, பீதகம்

தாழையின் பெயர்

முண்டகம், முடங்கல், கைதை, முசலி, மடி, கண்டல், கேதகை,

இருவாட்சியின் பெயர்

மயிலை, அனங்கம்

பட்டிசையின் பெயர்

பறிவை

நந்தியாவர்த்தத்தின் பெயர்

வலம்புரி

செவ்வரத்தத்தின் பெயர்

மந்தாரம்

பனையின் பெயர்

தாலம், பெண்ணை, புல், தாளி, புற்பத

கூந்தற்பூகத்தின் பெயர்

தாலம்

கமுகின் பெயர்

கந்தி, பூகம், பூக்கம்

பாக்கின் பெயர்

துவர்க்காய், பாகு, கோலம்

பலாமரத்தின் பெயர்

பனசம், வருக்கை, பாகல், பலவு

ஈரப்பலாவின் பெயர்

ஆசின

மாமரத்தின் பெயர்

மாந்தி, சூதம், ஆமிரம், கொக்கு, மாழை

தேமாவின் பெயர்

சேதாரம்

தெங்கின் பெயர்

தாழை, தென், நாளிகேரம், இலாங்கலி

பன்னாடையின் பெயர்

நெய்யரி, நாரி

வாழையின் பெயர்

கதலி, அரம்பை

கரும்பின் பெயர்

வேழம், கன்னல், இக்கு, கழை

மூங்கிலின் பெயர்

காம்பு, பாதிரி, முடங்கல், கழை, பணை, விண்டு, நேமி, தூம்பு, வேய், தட்டை, முந்தூழ், துளை, கிளை, முளை, வேணு, ஆம்பல், கீசகம், வேல், வேரல், அரி, அமை, திகிரி, வேழம், வரை, வெதிர்

ஆலமரத்தின் பெயர்

வடம், நியக்குரோதம், பூதம், கான்மரம், தொன்மரம், கோளி, பழுமரம்

வெட்பாலையின் பெயர்

குடசம், கிரிமல்லிகை

குடைவேலின் பெயர்

உடை

புன்கமரத்தின் பெயர்

நரஞ்சகம்

அசோகமரத்தின் பெயர்

செயலை, பிண்டி, காகோளி.

அரசமரத்தின் பெயர்

சுவலை, குஞ்சராசனம், அச்சுவத்தம், திருமரம், பணை, போதி, கணவம், பிப்பலம்

புளியமரத்தின் பெயர்

சிந்தகம், ஆமிலம், சிந்தூரம், எகின், திந்திடீகம்

தேக்கின் பெயர்

சாகம், சாதி

கொன்றையின் பெயர்

இதழி, தாமம், மதலை, கடுக்கை

முண்முருக்கின் பெயர்

கிஞ்சுகம், கவிர்

நாவலின் பெயர்

சம்பு, நேரேடு

குழிநாவலின் பெயர்

சாதேவம்

வேம்பின் பெயர்

நிம்பம், பிசுமர்த்தம்

எலுமிச்சையின் பெயர்

சம்பீரம், முருகு, சதாபலம், இலிருசம், அருணம், சம்பளம்

அத்திமரத்தின் பெயர்

அதவு, உதும்பரம், கோளி, அதம்

புளிமாவின் பெயர்

மாழை, சிஞ்சம், எகின்

இலந்தையின் பெயர்

வதரி, கோற்கொடி, கோலி, குவலி

இலந்தைக்கனியின் பெயர்

கோலம், கோண்டை

மாதுளையின் பெயர்

மாதுளம், மாதுளுங்கம், கழுமுள்

தாதுமாதுளையின் பெயர்

தாடிமம்

பிரம்பின் பெயர்

சாதி, வேத்திரம், குரல்

ஆத்தியின் பெயர்

தாதகி, ஆர், சல்லகி

தேற்றுமரத்தின் பெயர்

சில்லம், இல்லம்

வாகைமரத்தின் பெயர்

சிரீடம், பாண்டில்

வில்வமரத்தின் பெயர்

வில்வம், மாலூரம், கூவிளம்

பாராய்மரத்தின் பெயர்

பசுநா, விட்டில், புக்கு

கிலுகிலுப்பையின் பெயர்

பகன்றை

ஓடையின் பெயர்

உலவை

வாடாக்குறிஞ்சியின் பெயர்

குரவகம்

குறிஞ்சியின் பெயர்

குரண்டகம்

பேரீந்தின் பெயர்

கர்ச்சூரம்

கோட்டத்தின் பெயர்

குரவம்

மழைவண்ணக்குறிஞ்சியின் பெயர்

பாணம்

நாயுருவியின் பெயர்

கரமஞ்சரி

முல்லையின் பெயர்

தளவு, மாகதி, மெளவல், யூதிகை

கனாவின் பெயர்

களவு

கருங்காலியின் பெயர்

கதிரம்

விளாவின் பெயர்

விளவு, கபித்தம், வெள்ளில்

வெண்கடுகின் பெயர்

கடிப்பகை, ஐயவி, சித்தார்த்தம்

மருதமரத்தின் பெயர்

பூதவம், அருச்சுனம்

வேங்கைமரத்தின் பெயர்

கணி, பீதசாலம், திமிசு

முந்திரிகையின் பெயர்

மதுரசம், கோத்தனி

அதிமதுரத்தின் பெயர்

யட்டி, மதுகம், அதிங்கம்

செங்காந்தளின் பெயர்

காந்தள், பற்றை, இலாங்கலி, தோன்றி

வெண்காந்தளின் பெயர்

காந்துகம், கோடல், கோடை

புனமுருக்கின் பெயர்

பலாசு

வன்னியின் பெயர்

சமி

நுணாவின் பெயர்

தணக்கு

குருந்தமரத்தின் பெயர்

குந்தம்

குமிழின் பெயர்

கூம்பல்

குன்றியின் பெயர்

குஞ்சம்

கடம்பின் பெயர்

இந்துளம், மரா, கதம்பம், நீபம்

வெண்ணொச்சியின் பெயர்

சிந்துவாரம், நிர்க்குண்டி

சத்திக்கொடியின் பெயர்

தாடிமஞ்சம்

கடுமரத்தின் பெயர்

அரிதகி, பத்தியம்

நெல்லியின் பெயர்

ஆமலகம்

தான்றியின் பெயர்

கலித்துருமம்

திப்பலியின் பெயர்

மாகதி, காமன், கலினி

கொத்துமலியின் பெயர்

உருளரிசி.

கருவிளையின் பெயர்

கன்னி, காக்கணம், கிகிணி

துரிஞ்சிலின் பெயர்

முன்னம், சீக்கிரி

ஆடாதோடையின் பெயர்

வாசை

பருத்தியின் பெயர்

பன்னல், கார்ப்பாசம்

இத்தியின் பெயர்

சுலி, இரத்தி, இரத்திரி, இறலி

ஆமணக்கின் பெயர்

சித்திரகம், ஏரண்டம்

இருப்பையின் பெயர்

மதுகம், குலிகம்

எட்டியின் பெயர்

கோடரம், காளம், காஞ்சிரை, முட்டி

செங்கருங்காலியின் பெயர்

சிறுமாரோடம்

ஆச்சாமரத்தின் பெயர்

சாலம், சுள்ளி, மராமரம், ஆ

இலவமரத்தின் பெயர்

பொங்கர், சான்மலி, பூரணி

வழுதலையின் பெயர்

வங்கம், வழுதுணை

கழற்கொடியின் பெயர்

கர்ச்சூரம்

கழற்காயின் பெயர்

கழங்கு, முழல்

கற்றாழையின் பெயர்

குமரி, கன்னி

புலிதொடக்கியின் பெயர்

இண்டு

ஈகையின் பெயர்

ஈங்கை

சிறுபூளையின் பெயர்

உழிஞை

ஊமத்தையின் பெயர்

உன்மத்தம்

அகத்தியின் பெயர்

அச்சம், முனி, கரீரம்

எருக்கின் பெயர்

அருக்கம்

பச்சிலைமரத்தின் பெயர்

தமாலம், பசும்பிடி

சுண்டியின் பெயர்

சுச்சு

வறட்சுண்டியின் பெயர்

சமங்கை

சதுரக்கள்ளியின் பெயர்

வச்சிராங்கம், கண்டீர்வம், வச்சிரம்

மலைப்பச்சையின் பெயர்

குளவி

ஞாழலின் பெயர்

பலினி

சிறுகீரையின் பெயர்

சில்லி, மேகநாதம், சாகினி

சேம்பின் பெயர்

சகுடம்

வள்ளையின் பெயர்

நாளிகம்

கொத்தான் பெயர்

நந்தை

நறுவிலியின் பெயர்

அலி

சாறடையின் பெயர்

திரிபுரி

கூதாளியின் பெயர்

கூதாளம்

வெள்ளரியின் பெயர்

உருவாரம்

கக்கரியின் பெயர்

வாலுங்கி

காஞ்சொறியின் பெயர்

கண்டூதி

தாளியின் பெயர்

மஞ்சிகம்

சிவேதையின் பெயர்

பகன்றை

ஏலத்தின் பெயர்

அடி, ஆஞ்சி

இசங்கின் பெயர்

முத்தாபலம், குண்டலி

பாகலின் பெயர்

கூலம், காரவல்லி

பாலைமரத்தின் பெயர்

சீவந்தி, சீவனி

கொவ்வையின் பெயர்

விம்பம், தொண்டை

பசிரியின் பெயர்

பாவிரி

தும்பையின் பெயர்

துரோணம்

சுரையின் பெயர்

அலாபு

கொடிக்கொத்தான் பெயர்

நூழில்

முருங்கையின் பெயர்

சிக்குரு

இலைக்கறியின் பெயர்

அடகு

பீர்க்கின் பெயர்

பீரம்

பெரும்பீர்க்கின் பெயர்

படலிகை

பாற்சொற்றியின் பெயர்

பாயசம்

சீந்திக் கொடியின் பெயர்

அமுதவல்லி, சீவந்தி

கொடியின் பெயர்

இலதை, வள்ளி, வல்லி

நாணலின் பெயர்

சரம், காசை, காசம்

வெறிறிலைக் கொடியின் பெயர்

தாம்பூலவல்லி, தாம்பூலி, நாகவல்லி, திரையல், மெல்லிலை

மிளகின் பெயர்

கறி, மரீசம், காயம், கவினை, கோளகம், திரங்கல், மிரியல்

நெல்லின் பெயர்

வரி, சொல், விரீகி, சாலி, யவம்

செந்நெல்லின் பெயர்

நன்னெல், செஞ்சாலி

பயிரின் பெயர்

பைங்கூழ், பசும்புல்

கதிரின் பெயர்

குரல், ஏனல்

இளஞ்சூலின் பெயர்

பீட்டை

இளங்கதிரின் பெயர்

பீள்

பதரின் பெயர்

பதடி

நெற்போரின் பெயர்

சும்மை

தூற்றாதநெற்பொலியின் பெயர்

பொங்கழி

கோதுமையின் பெயர்

கோதி

அரிசியின் பெயர்

தண்டுலம்

வைக்கோலின் பெயர்

வழுது, வை, பலாலம்

மலைநெல்லின் பெயர்

ஐவனம்

வேயரிசியின் பெயர்

தோரை

குளநெல்லியின் பெயர்

நீவாரம்

கம்பின் பெயர்

செந்தினை, கவலை

தினையின் பெயர்

ஏனல்

பைந்தினையின் பெயர்

ஏனல்

கருந்தினையின் பெயர்

இறடி, கங்கு

தினைத்தாளின் பெயர்

அருவி, இருவி

துவரையின் பெயர்

ஆடகம்

கடலையின் பெயர்

மஞ்சுரம்

அவரையின் பெயர்

சிக்கடி, சிம்பை

உழுந்தின் பெயர்

மாடம்

பயற்றின் பெயர்

முற்கம்

கொள்ளின் பெயர்

காணம், குலத்தம்

துவரைகடலை முதலியவற்றின் பெயர்

முதிரை, கூலம்

காராமணியின் பெயர்

இதை

சோளத்தின் பெயர்

சொன்னல், இறுங்கு

எள்ளின் பெயர்

எண், திலம், நூ

எள்ளிளங்காயின் பெயர்

கவ்வை

இளையெள்ளின் பெயர்

குமிகை

வரகின் பெயர்

கோத்திரவம்

தருப்பையின் பெயர்

குசை, குமுதம், கூர்ச்சம், குசம்

அறுகின் பெயர்

பதம், தூர்வை

இளம்புல்லின் பெயர்

சடபம்

மஞ்சளின் பெயர்

நிசி, அரிசனம், பீதம், காஞ்சனி

இஞ்சியின் பெயர்

அல்லம், நறுமருப்பு

கருணைக்கிழங்கின் பெயர்

கந்தம், சூரணம்

மரப்பொதுவின் பெயர்

தரு, அகலியம், விருக்கம், தாவரம், விடபி, தாரு, துருமம், குசம், பூருகம், சாகி, பாதபம்

கிழங்கின் பெயர்

மூலம், சகுனம், கந்தம், மூலகம்

முளையின் பெயர்

கால், அங்குரம்,

வேரின் பெயர்

தூர், சிலை

மரக்கொம்பின் பெயர்

கோல், இபம், விடபம், கொம்பர், கோடரம், பொங்கர், சாகை, சுவடு, தாரு, பணை, சினை, உலவை

மரவயிரத்தின் பெயர்

கலை, ஆசினி, சேகு, காழ்ப்பு, காழ்

இலையின் பெயர்

தலம், அடை, தகடு, பன்னம், சதனம், பத்திரம், பலாசம், தமாலம்,

தழையின் பெயர்

உலவை

மரக்கன்றின் பெயர்

குழலி, பிள்ளை, போதகம், போத்து

இளங்கொம்பின் பெயர்

மெல்லியல்

கப்பின் பெயர்

கவர்

தளிரின் பெயர்

வல்லரி, கிசலயம், மஞ்சரி, முறி, அலங்கல், பல்லவம், குழை,

குருத்தின் பெயர்

முருந்து

தளிர்த்தலின் பெயர்

குழைத்தல், இலிர்த்தல்

அரும்பின் பெயர்

முகை, நனை, கலிகை, போகில், முகுளம், மொக்குள், மொட்டு, கோரகம், சாலகம்

பூவின் பெயர்

குசுமம், போது, தார், அலர், சுமனசம், மலர், தாமம், லீ, இணர், துணர்

பூங்கொத்தின் பெயர்

தொத்து, மஞ்சரி, துணர், இணர், குலை

பூந்தாதின் பெயர்

மகரம், கொங்கு, கேசரம், துணர்

பூந்தேனின் பெயர்

மகரந்தம்

தாதிற்றூளின் பெயர்

பராகம், பிரசம்

மலர்தலின் பெயர்

அலர்தல், அவிழ்தல், விள்ளல், நெகிழ்தல்

விரிமலரின் பெயர்

இகமலர், வெதிர், தொடர்ப்பூ

பழம்பூவின் பெயர்

சாம்பல், செம்மல், தேம்பல்

பூவிதழின் பெயர்

ஏடு, தோடு, தளம், மடல்

அகவிதழின் பெயர்

அல்லி

புறவிதழின் பெயர்

புல்லி

காயின் பெயர்

வடு, பிஞ்சு, தீவிளி

பழத்தின் பெயர்

கனி, பலம்

விதையின் பெயர்

பரல், காழ், பீசம், வித்து

கொத்தின் பெயர்

குலை, குச்சம், தாறு, சாறு, குடும்பு, படு

பலமிலாமரத்தின் பெயர்

அவகேசி

காய்த்திருந்தமரத்தின் பெயர்

பலினம்

உலர்ந்தமரத்தின் பெயர்

வானம்

பூவாதுகாய்க்குமரத்தின் பெயர்

கோளி, வனபதி

விறகின் பெயர்

இந்தனம், முருடு, கட்டை, கறல், சமிதை, காட்டம், ஞெகிழி, முளரி

மரச்செறிவின் பெயர்

கோடரம், பொதும்பர்

மரப்பொந்தின் பெயர்

பொள்ளல்

முள்ளின் பெயர்

கடு, கண்டகம்

சோலையின் பெயர்

துடவை, நந்தவனம், பூந்தோட்டம், அரி, உய்யானம், பொழில், உத்தியானம், கா, மரச்செறிவு, ஆராமம், தண்டலை, உபவனம்

ஊர்சூழ்சோலையின் பெயர்

வனம்

காட்டின பெயர்

அடலி, கான், புறவம், பொச்சை, ஆரணியம், காந்தாரம், கடம், வனம், முளரி, தில்லம், ககனம், கண்டகம், தாவம், விடர், சுரம், பழுவம், கானல், விபினம், கட்சி, கானம், கடறு, கானனம், அத்தம், களரி

பெருந்தூற்றின் பெயர்

குன்மம், பஞ்சி, விடபம்

சிறுதூற்றின் பெயர்

அறல், இறல், பதுக்கை

குறுங்காட்டின் பெயர்

இறும்பு

பெருங்காட்டின் பெயர்

வல்லை

காவற்காட்டின் பெயர்

அரண், இளை

முதிர்காட்டின பெயர்

முதையல்

கரிகாட்டின் பெயர்

பொதி, பொச்சை,

வேலியின் பெயர்

இளை

ஆண்மரமென்பது

அகக்காழ்,

பெண்மரமென்பது

புறக்காழ்

அலிமரமென்பது

வெளிறு

தாமரையின் பெயர்

புண்டரீகம், அம்போருகம், குசேசயம், முண்டகம், அரவிந்தம், முளரி, பங்கயம், வாரீசம், இண்டை, அம்புயம், சரோசம், சதபத்திரி, நளினம், கஞ்சம், வனசம், சலசம், கமலம், கோகனதம், திருமாலுந்தி, சரோருகம், பதுமம்

தாமரைமலரின் பெயர்

இறும்பு, இராசீவம்

தாமரைக்கொட்டையின் பெயர்

பொருட்டு, கன்னிகை

தாமரைச்சுருளின் பெயர்

விசி, வளையம்

தாமரைக்காயின் பெயர்

வராடகம்

செங்கழுநீரின் பெயர்

அரத்தவுற்பலம், செங்குவளை, கல்லாரம்

கருங்குவளையின் பெயர்

பானல், காவி, குவலயம்

கருநெய்தலின் பெயர்

நீலம், இந்தீவரம், உற்பலம்

வெண்ணெய்தலின் பெயர்

குமுதம்

அரக்காம்பலின் பெயர்

செங்குமுதம், செவ்வல்லி, சேதாம்பல்

வெள்ளாம்பலின் பெயர்

அல்லி, கைரவம்

திரள்கோரையின் பெயர்

சாய், பஞ்சாய்க்கோரை

வாட்கோரையின் பெயர்

கெருந்தி

முள்ளியின் பெயர்

கண்டல், முண்டகம்

முள்ளுடைமூலமெல்லாவ்றறிற்கும் பெயர்

முண்டகம்

பாசியின் பெயர்

நாரம், சைவலம், சடைச்சி

நீர்க்குளிரியின் பெயர்

கல்லாரம்

மருந்தென்னும் பெயர்

வல்லி, பல், பூடு, மரமுதலிய

சல்லியகாணியென்பது

வேல் தைத்த புண் மாற்று மருந்து

சந்தான கரணியென்பது

துணிபட்ட உறுப்பைப் பொருத்து மருந்து

சமனியகரணியென்பது

விரணந்தீர்க்குமருந்து

மூர்ச்சை தீர்த்துக் குற்றுயிர் தருமருந்தின் பெயர்

மிருதசஞ்சீவனி, அமுது

மருந்தின் பொதுப் பெயர் /p>

உறை, குளியம், யோகம், அதகம்

மாலையின் பெயர்

அலங்கல், பிணையல், ஆரம், சிகழிகை, அணி, சுருக்கை, இலம்பகம், தெரியல், சுக்கை, கத்திகை, தாமம், படலை, கண்ணி, தொடை, தொங்கல், ஒலியல், கோதை, தார், மஞ்சரி,

நுதலணியின் பெயர்

சூட்டு, இலம்பகம்

வாசிகையின் பெயர்

சிகழிகை, படலை,

வாகையாவது

கல்வி, கேள்வி, குடி, கொடை, படைகட்குள் வாட்டமில்லவரை வென்று மெளலி சூட்டுவது.

மரப்பெயர்த் தொகுதி நிறைவுற்றது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,