சூடாமணி நிகண்டு
விலங்கின் பெயர்த் தொகுதி

சிங்கத்தின் பெயர்

வயப்போத்து, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன், வயமா, மடங்கல், கண்டீரவம், பஞ்சானனம்.

யானையயாளியின் பெயர்

யாளி, அறுகு, பூட்கை

புலியின் பெயர்

வல்லியம், வயமா, சித்திரகாயம், வெல்லுமா, உழுவை, பாய்மா, வியாக்கிரம், தாக்கு, வேங்கை, குயவரி, சார்த்தூலம், புல், புண்டரீகம், கொடுவரி,

யானையின் பெயர்

தும்பி, மாதங்கம், தூங்க்ல், தோல், கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல், வல்லிலங்கு, நாகம், கும்பி, நால்வாய், பூட்கை, குஞ்சரம், கரேணு, அத்தி, வேழம், உவா, கரி, கயம், களிறு, கைம்மா,
சிந்துரம், வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம், தந்தாவளம், வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா, மதகயம், போதகம்,

யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்

யூதநாதன்

மதகயத்தின் பெயர்

மதோற்கடம்

யானைவாலின் பெயர்

தாலவட்டம்

யானைவானுனியின் பெயர்

வேசகம்

யானைமுதுகின் பெயர்

மஞ்சு

யானை மத்தகத்தின் பெயர்

மதகம், கும்பம்,

யானை மதம்பாய்சுவட்டின் பெயர்

கரடம்

யானைக்கைந்நுதியின் பெயர்

புட்கரம்

யானைமதத்தின் பெயர்

ஸ்ரீ கடம், கடாம், தானம்

யானைக்கொம்பினடுவின் பெயர்

பிரதிமானம்

யானைத் தந்தத்தின் பெயர்

கோடு, எயிறு

யானைக்கடைக்கண்ணின் பெயர்

நிரியாணம்

யானைச் செவியடியின் பெயர்

குளிகை

யானைக் கவுளின் பெயர்

கதுப்பு

யானைத் துதிக்கையுமிழ்நீரின் பெயர்

விலாழி

யானைப் பல்லடியின் பெயர்

கரீரம்

யானைமுன்காலின் பெயர்

காத்திரம்

யானைப்பின்காலின் பெயர்

அபரம்

யானைத் துதிக்கையின் பெயர்

தொண்டை, தொண்டலம், சுண்டை

யானைப் பிடியின் பெயர்

வடவை, அத்தினி, கரிணி

யானைத்திரளின் பெயர்

கடகம்

யானைக்கன்றின் பெயர்

கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி

யானைபடுகுழியின் பெயர்

பயம்பு

யானை நோயின் பெயர்

பாகலம்

குதிரையின் பெயர்

பரி, தூகம், பாடலம்., கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி, அயம், இவுளி, மா, அச்சுவம், புரவி, கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை
கத்துகம், கனவட்டம், பத்திரி, துரங்கம், குந்தம், அத்திரி,

குதிரை மயிரின் பெயர்

மேசகம், சுவல், குசை

குதிரைக்குளம்பின் பெயர்

குரம், குரச்சை

குதிரை போமார்க்கத்தின் பெயர்

மாதிகம்

பசுவின் பெயர்

கூலம், கோ, குடம், சுரபி, ஆ, நிரை, தேனு, பெற்றம்

தெய்வப்பசுவின் பெயர்

கபிலை, தேனு

மலட்டுப்பசுவின் பெயர்

வசை

ஈன்றபசுவின் பெயர்

வற்சலை

பசுவின் கன்றின் பெயர்

வற்சம்

ஒரீற்றுப்பசுவின் பெயர்

கிட்டி

நற்பசுவின் பெயர்

பத்திரை

பசுவின் முலைப் பெயர்

சுரை

உதைகாற்பசுவின் பெயர்

சுதை

முலை மடியின் பெயர்

செருத்தல், ஆபீனம்

பசுக்கூட்டத்தின் பெயர்

நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம்

எருத்தின் பெயர்

பாறல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூரி, புல்லம்,

எருத்தின் முரிப்பின் பெயர்

இமில்

பேரெருத்தின் பெயர்

பாறல், பகடு, தூர்வகம்

இடபத்தின் பெயர்

ஏறு, உக்கம், நரை, நந்தி, கூளி

பொதியெருத்தின் பெயர்

தூர்வகம், துரியம்

எருமையின் பெயர்

காரான், வடவை, மேதி, சைரிபம், கவரி, காரா, மூரி, மகிடம்

எருமையாண் பெயர்

கடா, பகடு

மலட்டெருமையின் பெயர்

மை

ஆட்டின் பெயர்

அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், புருவை, தகர்

செம்மறியாட்டின் பெயர்

துருவை, மை, கொறி

செம்மறியாட்டாணின் பெயர்

தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்

ஆட்டுக்குட்டியின் பெயர்

குட்டன், சோரன், மறி, பறழ்

வெள்ளாட்டின் பெயர்

வெள்ளை

வெள்ளாட்டாணின் பெயர்

செச்சை, சாகம், மோத்தை

வரையாட்டின் பெயர்

சரபம், வருடை

பன்றியின் பெயர்

கேழல், அரி, குரோடம், கிரி, கிடி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா, கோட்டுமா, போத்திரி, வராகம், கோலம், குகரம், எறுழி

முட்பன்றியின் பெயர்

சல்லியம், முளவுமா, எய், சல்லகம்

முட்பன்றி முள்ளின் பெயர்

சலம், சவலம்

கரடியின் பெயர்

பல்லுகம், உளியம், எண்கு, பல்லுகம், எலு, பல்லம், குடாவடி

சாமரத்தின் பெயர்

பவரி, சீகரம், கவரி

கவரிமான் பெயர்

படகம், பட்டம், மனமா, எகின்

காட்டாவின் பெயர்

கவயமா, ஆமா

கீரியின் பெயர்

காத்திரி, நகுலம், தீர்வை

மானின் பெயர்

அரிணம், சாரங்கம், நல்லி, உழை, பிணை, குனம், மிருகம், மறி, குரங்கம், ஏணம்

கலையின் பெயர்

இரலை, வச்சயம், புல்வாய், கருமான்

புல்வாயின் பெயர்

இரலை

கழுதையின் பெயர்

வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்திரி, கோகு, வேசரி, கரம்

கோவேறு கழுதையின் பெயர்

வேசரி

ஒட்கத்தின் பெயர்

தாசேரம், அத்திரி, நெடுங்கழுத்தல்

நரியின் பெயர்

ஒரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, பூரிமாயன், குரோட்டா, சிருகாலன்

முசுவின் பெயர்

ஒரி, கோலாங்கூலம், மைம்முகன், கள்வன், கலை

நாயின் பெயர்

சூரன், முடுவல், பாசி, புரோகதி, சுனகன், குக்கல், கூரன், எகினன், அக்கன், குரைமுகன், ஞமலி, ஞாளி, சாரமேயன், கணங்கன், சுவர்

பெண்ணாயின் பெயர்

முடுவல்

செந்நாயின் பெயர்

விருகம், கொக்கு

பூஞையின் பெயர்

வெருகு, அலவன், ஓதி, விடாரகம், விலாளம், பூசை, மார்ச்சாலம், பாக்கன், இற்புலி

கத்தூரியின் பெயர்

துருக்கம், நானம், மான்மதம், நரந்தம்

நாவியின் பெயர்

மறுவி

குரங்கின் பெயர்

வலிமுகம், கடுவன், வானரம், அரி, மந்தி, பிலவங்கம், கோகிலம், கோடாரம், யூகம், மர்க்கடம், நாகம், கவி,

கருங்குரங்கின் பெயர்

காருகம், யூகம்

ஒந்தியின் பெயர்

சாயானதம், சரடம், காமரூபி, தண்டு, ஓமான், ஓதி, கோம்பி, முசலி, ஒத்தி,

மூஞ்சூற்றின் பெயர்

சுவவு, சுண்டன், சுசுந்தரி

எலியின் பெயர்

சிகரி, ஆகு, இரும்பன்

காரெலியின் பெயர்

கருப்பை

பெருச்சாளியின் பெயர்

களதம், துந்துளம், ஆகு, முடுடிகம், உந்துரு

அணிலின் பெயர்

வரிப்புறம், வெளில்

உடும்பின் பெயர்

தடி, முசலி, கோதா,

முயலின் பெயர்

சசம்

விலங்கினாண்பெயர்

கடுவன், மா, ஒருத்தல், போத்து, கலை, தகர், களிறு, சே, பகடு, உம்பல், ஏறு, ஓரி

கடுவனென்னும் பெயர்

குரங்கு, பூஞை, இரண்டுக்குமாம்

மாவென்னும் பெயர்

யானை, பன்றி, புரவி

ஒருத்தலென்னும் பெயர்

கரடி, புல்வாய், மான், யானை, கவுரி, எருமை, பன்றி, புலி, மரை

போத்தென்னும் பெயர்

மரை, பசு, புலி, பூஞை, புல்வாய்

கலையென்னும் பெயர்

முசு, மான்

தகரென்னும் பெயர்

துரவாடு, வேழம், யாளி, சுறா

களிறென்னும் பெயர்

நரி, சுறவு, பன்றி

சேவென்னும் பெயர்

குதிரை, பெற்றம், புல்வாய்

பகடென்னும் பெயர்

எருமை, யானை, பெற்றம்

உம்பலென்னும் பெயர்

இபம்

ஏறென்னும் பெயர்

ஆன், எருமை, பன்றி, கவரி, சங்கு, மான், மரை, புல்வாய், சுறவு

ஓரியென்னும் பெயர்

நரி, முசு

விலங்கின் பெண்பாற்பெயர்

பிடி, பிணை, பெட்டை, மந்தி, பிணா, ஆ, நாகு, பாட்டி

பிடியென்னும் பெயர்

குஞ்சரம், கவரி, ஒட்டகம்,

பிணையென்னும் பெயர்

உழை, புல்வாய், நாய், வராகம்,

பெட்டை யென்னும் பெயர்

ஒட்டகம், கழுதை, வாசி, சிங்கம், மரை

மந்தியென்னும் பெயர்

முசு, ஊகம், குரங்கு

பிணாவென்னும் பெயர்

புல்வாய், நாய், பன்றி

ஆவென்னும் பெயர்

எருமை, பெற்றம், மரை

நாகென்னும் பெயர்

எருமை, மரை, பெற்றம், நீர்ச்சாதி

பாட்டியென்னும் பெயர்

நரி, பன்றி, நாய்

பிணாப்பெண்ணென்னும் பெயர்கள்

பெண்பாலெவற்றிற்குமாம்

விலங்கின் பிள்ளைப பெயர்

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம்

பறழ் குருளை குட்டியென்னும் பெயர்கள்

புலி, முயல், வராகம், நரி, நாய்

பிள்ளை யென்னும் பெயர்

நாயொழிந்தவற்றிற்காம்

மறியென்னும் பெயர்

ஆடு, அழுங்கு, மான், குதிரை

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பென்னும் பெயர்கள்

குரங்கு முதன் மரக்கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளைகட்காம்

கன்றென்னும் பெயர்

கடமை, மான், எருமை, பெற்றம், கவயம், ஒட்டகம், யானை, பரி, மரை, கராம், கவரி

குழலியென்னும் பெயர்

கடமை, மான், எருமை, யானை

போதகமென்னும் பெயர்

புலி, சிங்கம், யானை

பறழ் குட்டி பிள்ளை யென்னும் பெயர்கள்

கீரி, பூனை, முயல், அணில்

பறழ் குட்டி யென்னும் பெயர்கள்

பாக்கன், அணில்

பறழ் பிள்ளையென்னும் பெயர்கள்

பார்ப்பு, தவழ்சாதி

குருளைகன்றென்னும் பெயர்கள்

மான்

குழவிகுருளை யென்னும் பெயர்கள்

யாளி

குழலிகுருளை யென்னும் பெயர்கள்

முசு

விலங்கின் பொதுப்பெயர்

மா, மான், மிருகம், குரங்கு

விலங்கின் கூட்டத்தின் பெயர்

சாலம், வியூகம், யூதம், குலம், விருந்தம், கணம்

விலங்கின் வாலின் பெயர்

கூலம், வேசகம், தோகை, இலாங்கூலம், வாலதி

விலங்கின் வாற்கீழிடத்தின் பெயர்

வெருகம்

விலங்கின் கொம்பின் பெயர்

மருப்பு, சிருங்கம், கோடு, உலவை, விடாணம்

கொம்பில்லா விலங்கின் பெயர்

குமரம்

தோலின் பெயர்

கிருத்தி, புறணி, போர்வை, அதள், ஒலியல், தொக்கு, துருத்தி, சருமம், பச்சை, துவக்கு, உரி, வடகம்

ஊனின் பெயர்

தசை, புலால், புலவு, புண், தடி, புளிதம், தூ, பிசிதம், வள்ளுரம், விடக்கு

புலாலின் பெயர்

முடை, ஊழ்த்தல், பூதி, தசை

பசுவினிறைச்சியின் பெயர்

வள்ளுரம்

இரத்தத்தின் பெயர்

எருவை, நெய்த்தோர், சோரி, உதிரம், புண்ணீர், குருதி, செம்பால், புலானீர், சோணிதம், செந்நீர், சுடுவன்கறை

கொழுப்பின் பெயர்

நிணம், விளர், விழுக்கு

கருப்பத்தின் பெயர்

கரு, சினை, பீள், சூல், வயாவு

வழும்பின் பெயர்

வழுக்கு

ஈரலின் பெயர்

ஈருள்

முடையின் பெயர்

புலவு, ஊத்தை

மாசின் பெயர்

மலம்

உண்மாசின் பெயர்

உபமலம்

பாம்பின் பெயர்

அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம், பணி,

சாரைப்பாம்பின் பெயர்

அண்டம், இராசிலம்

மண்டலப் பாம்பின் பெயர்

கோளகல்

கண்குத்திப் பாம்பின் பெயர்

மாலுதானன்

பெரும்பாம்பின் பெயர்

மாசுணம், பாந்தள்

நாகத்தின் பெயர்

மூர்க்கன்

கருவழலைப் பாம்பின் பெயர்

இராசமாநாகம்

பறவை நாகத்தின் பெயர்

குக்குடசர்ப்பம்

பாம்பின் படத்தின் பெயர்

பணம், பை,

படப் பொறியின் பெயர்

உத்தி, துத்தி

பாம்பின் நச்சுப் பல்லின் பெயர்

தட்டம்

பாம்புயிர்ப்பின் பெயர்

அதட்டம்

அன்னத்தின் பெயர்

எகினம், ஓதிமம், மராளம், விகங்கம், வக்கிராங்கம்

மயிலின் பெயர்

சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், மயூரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம்

மயிற்பீலியின் பெயர்

சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, தோகை, தொங்கல், தூவி

மயிற்குரலின் பெயர்

அகவல், ஆலல், ஏங்கல்

இறகின் முள்ளின் பெயர்

முருந்து

அன்னச்சிறகின் பெயர்

தூவி

கருடன் பெயர்

கலுழன், வைனன், வைனதேயன், பன்னகவைரி, தார்க்கியன், பறவைவேந்தன், உவனம்

சாதகப்புள்ளின் பெயர்

சாரங்கம்

எண்காற்புள்ளின் பெயர்

சிம்புள், வாருண்டம், வருடை, சம்பரம், துரோணம், சாபம்,

சக்கரவாகப்புள்ளின் பெயர்

நேமிப்புள், கோகம், யானைக்குருகு

கழுகின் பெயர்

புண்டரம், கங்கம், எருவை, பவணை, உவணம், சகுந்தம்,

பருந்தின் பெயர்

சேனம், பாரசிகை, பாறு, கங்கம்

அசுணமாவின் பெயர்

சேகயம்

கிளியின் பெயர்

சாரு, அரி, வன்னி, தத்தை, சுகம், கிள்ளை, கீரம், சுவாகதம், அவந்திகை

கருங்கிளியின் பெயர்

கீரம், கிள்ளை

நிலாமுகியின் பெயர்

சகோரம்

செம்போத்தின் பெயர்

குக்கில்

குயிலின் பெயர்

கோகிலம், களகண்டம், கோரகை, பிகம், பரபுட்டம்

கோட்டான் பெயர்

கூகை, உலூகம், குடிஞை, குரால்

நாகணவாய்ப்புள்ளின் பெயர்

பூவை, சாரிகை

வலியன் பெயர்

கஞ்சனம், கிகினி, வயவன், கஞ்சரீடம், பாரத்துவாசம்

காரிப்பிள்ளையின் பெயர்

வஞ்சுளன், வயவன், வயான்

கரிக்குருவியின் பெயர்

கஞ்சனம், கயவாய்

கிச்சிலியின் பெயர்

சிநல், கவுதம், பொன்வாய்ப்புள், தித்திரி

கூகையின் பெயர்

பெரும்புள், கெளசிகம் ஊமன்

கோழியின் பெயர்

குருகு, காலாயுதம், குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம்

ஊர்க்குருவியின் பெயர்

குலிங்கம், சடகம், புலிங்கம்

விலங்கின் பெயர்

பூழ்

கானங்கோழியின் பெயர்

கலிங்கம், கம்புள்

காடையின் பெயர்

குறும்பூழ்

கிவலின் பெயர்

கோரசம், புல், இதல்

கவுதாரியின் பெயர்

சிரவம்

பகண்டையின் பெயர்

சில்லை

பொய்யாப்புள்ளின் பெயர்

சலாங்கு

நாகத்தின் பெயர்

கரடம், வாயசம், அரிட்டம், கரும்பிள்ளை, கொடி,

ஆந்தையின் பெயர்

இருடி, பிங்கலை, கின்னரம்

கரும்புறாவின் பெயர்

பாராவதம், கபோதம்

புறாப் பொதுவின் பெயர்

தூதுணம், கபோதம், களரவம்

மாடப்புறாவின் பெயர்

கன்மேய்வு, காளபதம்

உள்ளான் பெயர்

உள்ளல்

தூக்கணங்குருவியின் பெயர்

சிதகம்

சம்பங்கோழியின் பெயர்

கம்புள்

அன்றிலின் பெயர்

கவுஞ்சம்

கொய்யடி நாரையின் பெயர்

குருகு, வண்டானம்

பொருநாரையின் பெயர்

பிதா, போதா

கருநாரையின் பெயர்

சிகரி

வெள்ளை நாரையின் பெயர்

சாரசம்

நீர்க்காக்கையின் பெயர்

அர்க்கம், காரண்டம்

கொக்கின் பெயர்

குரண்டம், வாலாகம், பகம்

நீர்வாழ் பறவையின் பெயர்

உன்னம், கிராமம், உற்குரோசம், கின்னரம்

வண்டின் பெயர்

அரி, அளி, ஞிமிறு, மந்தி, அறுபதம், சிலீமுகம்,சஞ்சரிகம், சரகம், சஞ்சானிகம், சுரும்பு, கீடம், பிரமரம், மா, கீதம், பிருங்கம்,பிரசம், புள், புண்டரீகம், தும்பி, மதுபம்

பெண்வண்டின் பெயர்

கரும்புள், கேசவம், தேன்

ஆண்வண்டின் பெயர்

சுரும்பு, மதுகரம், தும்பி

துருஞ்சிலின் பெயர்

ஆலாலம்

வாவலின் பெயர்

அஞ்சலிகை

இந்திரகோபத்தின் பெயர்

ஈயல், மூதா

தேனீயின் பெயர்

சரகம், பிரசம்

சிள் விட்டின் பெயர்

சிதடி, சில்லிகை, சில்லை, சிமிலி

விட்டிற் பறவையின் பெயர்

சலபம், பதங்கம்

அளம்பின் பெயர்

நிலத்தி

மின்னினியின் பெயர்

கச்சோதம்

கொதுகின் பெயர்

மசகம், துள்ளல், அசவல்

மயிலும் ஏழாலுமல்லனவாகிய புள்ளினாண்பெயர்

சேவல்

மயிலும் ஏழாலென்னுமிரண்டினாண்பெயர்

போத்து

கோழி கூகைகளின் பெண் பெயர்

அளகு

பறவைப்பெண்ணின் பெயர்

பெடை, பெட்டை, பேடை

புட்பொதுவின் பெயர்

லிகங்கம், ஆசுகி, வீ, விகிரம், குடிஞை, பக்கி, சகுந்தம், பத்திரி, பதங்கம், பிணிமுகம், சுகம், பறவை, பதகம், போகில், குரீஇ, வயானம்

இறகின் பெயர்

சிறகு, சதனம், வாசம், சிறை, பிஞ்சம், கூரல், பக்கம், பறை, சதம், தூவி, தோகை, பத்திரம், குரல், கூழை, இறை

முட்டையின் பெயர்

அரிட்டம், கோசம், அண்டம், சினை

பறவைக் குஞ்சின் பெயர்

பிள்ளை, பார்ப்பு

பறவை மூக்கின் பெயர்

சுச்சு, சுவவு, துண்டம், அலகு

புட்சிறகடித்துப் புடைத்தலின் பெயர்

ஓசனித்தல்

புள்ளீட்டத்தினோசையின் பெயர்

துழனி

பறவைக் கூட்டத்தின் பெயர்

தொழுதி

மகாமீனின் பெயர்

கலை, சுறா, மீனேறு

பெருமீனின் பெயர்

யானை மீன், திமி

யானைமீனை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலம்

திமிங்கிலத்தை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலகிலம்

சங்கின் பெயர்

நந்து, சுத்தி, நாகு, வளை, கம்பு, கோடு, வாரணம், வண்டு, இடம்புரி, வெள்ளை

வலம்புரிச் சங்கின் பெயர்

கொக்கரை

சலஞ்சலத்தின் பெயர்

பணிலம்

இடம்புரி

இப்பியாயிரஞசூழ்ந்தது

வலம்புரி

இடம்புரிச் சங்காயிரஞ் சூழ்ந்தது

சஞ்சலம்

வலம்புரியாயிரஞ் சூழ்ந்தது

பாஞ்சசன்னியம்

சலஞ்சலங்களாயிரஞ் சூழ்ந்தது

முதலையின் பெயர்

இடங்கர், சிஞ்சுமாரம், வள்மீன், கராம்

ஆண்முதலையின் பெயர்

சாரம்

ஆமையின் பெயர்

கூர்மம், உறுப்படக்கி, கச்சபம், கமடம்

பெண்ணாமையின் பெயர்

துளி

மலங்கின் பெயர்

நூறை

கிளிங்சிலின் பெயர்

ஏரல், எருந்து, ஊரல்

இறான்மீனின் பெயர்

இறவு

ஆரான்மீனின் பெயர்

ஆரல்

கெண்டை மீனின் பெயர்

சபரம், சேல்

நத்தையின் பெயர்

கருநந்து, நாகு

அட்டையின் பெயர்

உரு

மீன் பொதுப்பெயர்

மயிலை, மற்சம், பழல்

பல்லியின் பெயர்

புள்ளி, கெவுளி, கோகிலம்

நாகாவண்டின் பெயர்

நொள்ளை

சிலம்பியின் பெயர்

உலூதை

எறும்பின் பெயர்

பிலஞ்சுலோபம், பிபீலிகை

நாங்கூழின் பெயர்

பூநாகம்

செல்லின் பெயர்

சிதலை, கறையான்

தேளின் பெயர்

நளிவிடம், தெறுக்கால், துட்டன், விருச்சிகம்,

ஞெண்டின் பெயர்

களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்கடகம்,

உருவின் பெயர்

உசு

தவளையின் பெயர்

மண்டூகம், தேரை, அரி, நுணலை, நீகம், பேகம்,

புழுவின் பெயர்

கிருமி, பொட்டு

உலண்டின் பெயர்

கீடம், கோற்புழு

கோற்றேனின் பெயர்

பிரசம்

தேன்கூட்டின் பெயர்

இறால்

விலங்கின் பெயர்த்தொகுதி நிறைவுற்றது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,