நாலடியார் பாடல்கள்

நன்றி : சமணமுனிவர்கள் இயற்றிய
நாலடியார் மூலமும் தெளிபொருள் விளக்கமும் நூல்

உரையாசிரியர்கள் :
வை.மு.சடகோபராமாநுஜாசாரியர், சே.கிருஷ்ணமாசாரியர். (1921)



29 ஆம் அதிகாரம் - இன்மை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
282


நீரினு நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும்
யாரு மறிவர் புகைநுட்பந் - தேரி
னிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து

( பாடலின் விளக்கம் )

இரத்தலாகிய துன்பத்தை உடையவன் புகுதற்கு அரிய ஓட்டையிலும் புகுந்து இரப்பான் என்பதன்வழி இரத்தலின் கொடுமையும், அதன் துன்பத்தையும் வலியுறுத்துகிறது.


33 ஆம் அதிகாரம் - புல்லறிவாண்மை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
327


தாமேயு மின்புறார் தக்கார்க்கு நன்றாற்றா
ரேமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் - தாமயங்கி
யாக்கத்துட் டூங்கி யவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

( பாடலின் விளக்கம் )

புத்தியீனர் செல்வத்தைத் தாமும் அநுபவியாமல், தானகருமமுஞ் செய்யாமல் தமது காலத்தை வீணே கழிப்பார்கள் என்பதாம்.


35 ஆம் அதிகாரம் - கீழ்மை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
345


பொற்கலத் தூட்டி புறந்தரினு நாய்பிற
ரெச்சிற்
கிமையாது பார்த்திருக்கும் -மச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங் கீழ் செய்யுங்
கருமங்கள் வேறுபடும்

( பாடலின் விளக்கம் )

நல்லுணவுகளைக் கொடுத்து மேன்மைப் படுத்தினாலும் இழிவான உணவை எதிர்பார்த்திருப்பது நாய்க்கு இயல்பாதல் போல பெருமை கொடுத்துக் கெளரவித்தாலும், இழிவான காரியங்களைச் செய்வது, கீழ் மக்களியல்பு என்பதாம்.


38 ஆம் அதிகாரம் - பொது மகளிர்

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
375


பாம்பிற் கொருதலை காட்டி யொருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டு - மாங்கு
மலங்கன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறி வினார்

( பாடலின் விளக்கம் )

தன்னைப் பிடிக்கும் பாம்புக்கும் மீனுக்கும் பிடிபடக் கூடுமென்னும் ஆசையைக் காட்டி ஒன்றுக்கும் அகப்படாமல் தப்பித்துக் கொண்டு செல்லுகிற விலாங்கு மீனைப்போல பலருக்கும் ஆசைகாட்டி மயக்கும் பொது மகளிரை அறிவில்லாதவர்கள் சேர்வரேயன்றி அறிவுடையார் சேரமாட்டார் என்பதாம்.


7 ஆம் அதிகாரம் - சினமின்மை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

௧0


கூர்த்துநாய் கெளவிக் கொளக் கண்டுந் தம்வாயாற்
போர்த்துநாய் கெளவினா ரீங்கில்லை- நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன் மக்க டம்வாயான் மீட்டு


( பாடலின் விளக்கம் )

கீழோம் தம்மை வைதாலும் மேலோரும் அவரைக் கோபித்து எதிர்வைதல் நாய்கடித்தால் அதனை எதிரிற் கடித்தல் போல் தகுதியற்ற தென்பதாம்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,