தலைவன் கூற்று
( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )
பாடல்
எண்
40
|
யாயு
ஞாயும்
யாரா கியரோ
எந்தையு
நுந்தையு
மெம்முறைக்
கேளிர்
யானு நீயு
மெவ்வழி யறிதும்
செம்புலப்
பெயனீர்
போல
அன்புடை
நெஞ்சந்
தாம்கலந் தனவே.
|
( பாடலின் விளக்கம் )
தலைவன் பிரிவானோ என்று ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் - ஒரு தொடர்புமில்லாத நம் ஊழின்
வன்னையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது - என்று உணர்த்தியது.
|
தலைவி கூற்று.
( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )
பாடல்
எண்
25
|
யாருமில்லைத்
தானே கள்வன்
தானது பொய்ப்பின்
யானெவன்
செய்கோ
தினைத்தா ளன்ன
சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல்
பார்க்கும்
குருகு முண்டு
தான் மணந்த ஞான்றே
|
( பாடலின் விளக்கம் )
தலைவன் நெடுங்காலம் மணஞ்செய்து கொள்ளாமலிருந்தல் பற்றி வருந்திய தலைவி, தலைவர் அருள் பூண்டு என்னை
வரைந்து கொண்டாலன்றி எனக்கு உதவி செய்யத் தக்க சான்று பகர்வார் வேறு ஒருவரும் இலர் - என்று கூறியது. மணம்
செய்தல் நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
|
தலைவி கூற்று
( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )
பாடல்
எண்
49
|
அணிற்பல் லன்ன
கொங்கு முதிர்
முண்டகத்து
மணிக்கே ழன்ன
மாநீர்ச்
சேர்ப்ப
இம்மை மாறி
மறுமை யாயினும்
நீயா கியரென்
கணவனை
யானா கியர்
நின்னெஞ்சுநேர் பவளே
|
( பாடலின் விளக்கம் )
தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, நாம்
பிறவி தோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக - என்று தலைவி கூறியது.
|
தலைவி கூற்று
( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )
பாடல்
எண்
57
|
பூவிடைப் படினும்
யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற்
புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய
தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக தில்ல
கடனறிந்
திருவே மாகிய
வுலகத்
தொருவே மாகிய புன்மை
நா முயற்கே.
|
( பாடலின் விளக்கம் )
தாய் முதலியவர்களாற் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி - தலைவரும்
யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று - என்று கூறியது.
|
தோழி கூற்று
( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )
பாடல்
எண்
59
|
பதலைப் பாணிப்
பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்
தகல்வாய்க்
குண்டுசுனைக்
குவளையொடு
பொதிந்த
குளவி நாறு
நின்
நறுநுதன்
மறப்பரோ
மற்ற முயலவும்
சுரம்பல விலங்கிய வரும் பொருள்
நிரம்பா வாகலி
னீடலோ வின்றே
|
( பாடலின் விளக்கம் )
தலைவன் பொருள் தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் வருந்திய தலைவியை நோக்கி - தலைவர் நின்னை
மறவார். தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் மீளுவர் - என்று தோழி கூறியது.
|
நன்றி : குறுந்தொகை மூலமும் உரையும் நூல்
உரையாசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள். (1962)
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|