இந்தியா இதழின் கோட்டோவியங்கள்

8 செப்டம்பர் 1906 - இப்படத்தில் இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேயர்கள் 1 வருஷத்திற்கு 45 கோடி ரூபாய்களைத் தவராமல் உறிந்து விடுகிறதைத் தெளிவாக விவரிக்கிறது. இந்தியா பொக்கிஷத்திலிருந்து பணம் போவதைப் பார்த்து இந்தியர்கள் மிகவும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். ஐயோ பாவம் ! என்ன கஷ்டம் ?



1906 இல் பாரதி இங்கிலாந்தின் வணிக நிலை கண்டு வெகுண்டு எழுந்து தான் நடத்திய இந்தியா பத்திரிகையில் கோட்டோவியமாக இந்தக் காட்சியினைச் சுட்டிக் காட்டியுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகோ.... வெளிநாட்டவர் அனைவரும் இந்தியாவில் தொழில் தொடங்கி நம்மவர்களைக் கூலிகளாக்கி, கொழுத்துப் பணத்தை சுருட்டுகிறார்கள். இந்தியத் தொழில் நலிவடைந்து கிடக்கிறது. பன்னாட்டு வணிகர்கள் தண்ணீரையும் கூட காசாக்குகிறார்கள். ஆனால் இன்று யாருமே எழுதுவதில்லை. ஏன் எதிர்ப்புக்கூட கொடுப்பதில்லை. விழிப்புணர்வு ஏற்ற மீண்டும் பாரதிதான் வேண்டுமோ !


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,