வாக்ரிபோலி மொழியில் திருக்குறள் |
தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்தில் நரிக்குறவரின் மொழியான வாக்ரிபோலி என்னும் மொழியில் மொழி
பெயர்க்கப்பட்ட திருக்குறளானது இருந்தது. நூலகர் காட்டியபொழுது வியந்தேன்.
1979 சூலையில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள திருவள்ளுவர் பாடசாலையின் மாணவர்களது அரும்
முயற்சியில், திருமிகு கிப்ட் சிரோமனி, பாலா, ரவிச்சந்திரன், முரளிதரன், திருமலை ஆகியோர் தொகுப்பாளர்களாக
இருந்து இந்த மொழி பெயர்ப்பானது செய்யப்பட்டுள்ளது. 1330 குறளும் மொழி பெயர்த்துத் தொகுக்கப்பட்டுள்ளது.
வாக்ரிபோலிக்கென எழுத்துருக்கள் இல்லாததால் தமிழின் எழுத்துருக்களையே பயன்படுத்தி இந்த மொழி
பெயர்ப்பானது செய்யப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள கடவுள் வாழ்தது கீழே தரப்பட்டுள்ளது.
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |