தமிழர்களின் அறிவியல் உணர்வும், விண்ணியல் தெளிவும்

நம் தமிழ் மக்கள் அறிவியல் உணர்வும், விண்ணியல் தெளிவும், மருத்துவ நுட்பமும் உடையவர்களாக வாழ்ந்திருந்தனர். விண்ணியல் அறிவை உணர்ந்த இவர்கள்தான் நாள்களின் பெயர்களைக் கோள்களின் பெயர்களாக அமைத்து நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் எனக் கணக்கிட்டு வாழ்ந்திருந்தனர். தமிழ் இலக்கியங்களில் இத்தகைய செய்திகள் நிறைய உள்ளன.

ஞாயிறு (SUN) நாம் வாழும் மண்ணுலகத்திற்கும், கதிரவனுக்கும் இடையில் உள்ள தொலைவு149 மில்லியன் கி.மீ. கதிரவன் ஒரு சிறிய விண்மீன், அதைச் சுற்றி ஒன்பது கோள்கள் உள்ளன.

திங்கள் (MOON) கதிரவன் ஒளியைப் பெற்றுதான் நிலவு ஒளிர்கிறது. மண்ணுலகில் நில அதிர்ச்சி ஏற்படுவது போலவே நிலவிலும் ஏற்படுகிறது. நிலவில் புவியீர்ப்புத்திறன் மிகவும் குறைவு. நிலவின் பரப்பில் 59 விழுக்காடு மண்ணிலிருந்து பார்க்கமுடியும்.

செவ்வாய் (MARS) செவ்வாய் என்பது செம்மையைக் குறிக்கும். செவ்வாய் கோளும் சிவப்புதான். கதிரவன் குடும்பத்தில் நிலவுக்கு அடுத்தபடியாக இருக்கும் கோள் செவ்வாய்.

அறிவன்(புதன்)(MERCURY) கோள்களில் மிகச் சிறியது அறிவன். அது கதிரவனுக்கு மிக அண்மையில் உள்ளது. கதிரவன் மண்டலத்திலுள்ள கோள்களில் மிகவும் விரைவாக சுற்றிவரும் கோள் இதுதான்.

வியாழன் (JUPITER) கோள்களில் மிகப்பெரியது வியாழன். வியாழன் என்பதற்கு பெரியது என்னும் பொருள் தமிழில் உண்டு. ஒரு வியாழவட்டம் என்பது 12 ஆண்டுகள் ஆகும்.

வெள்ளி (VENUS) ஒளிமிக்க கோள் வெள்ளிக்கு மாலை விண்மீன் என்று பெயர் உண்டு. அது கதிரவன் மறைந்து ஒன்னரை மணி நேரத்துக்குப் பிறகே மறைகிறது. விடிவெள்ளி பின்னிரவில் தோன்றும்.

காரி (சனி)(SATURN) அதற்கு ஏழு வளையங்கள் உள்ளன. அவற்றின் மொத்தச் சுற்றளவு 80,500 கி.மீ. கனம் 30 செ.மீ. காரி, அதிக வளைக் கோள்களைக் கொண்டது. மொத்தம் 17 நிலவுகள் (துணைக்கோள்கள்) உள்ளன. அது மற்றக் கோள்களைக் காட்டிலும் மிகவும் மென்மையானது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,