கைத் துணியில் நாள்காட்டி

அணு அஞ்சலட்டை இதழ் சிவகங்கையிலிருந்து வெளிவருவது. திரையச்சு ஓவியரும். தொழில் நுட்ப வல்லுநருமான இவர், ஒவ்வொரு திங்களிலும் ஒரு புதுமையைத் தன் அஞ்சலட்டை இதழில் புகுத்தி வருகிறார். முன்பு ஒவ்வொரு நாளும் கிழிக்கிற ஆண்டு நாள்காட்டியை அஞ்லட்டையில் உருவாக்கி அனுப்பியுள்ளார். இநத ஆண்டு..

மேலே காணும் நாள்காட்டியை வடிவமைத்து அனுப்பியுள்ளார். இது கைத்துடைக்கும் துணி அளவுள்ள வெள்ளைத் துணியில் திரையச்சில் இந்த ஆண்டுக்கான நாள்காட்டியாகும். அன்னை தெராசா, அப்துல்கலாம் படங்களை வெளியிட்டுள்ளதோடு உடல் நலக்குறிப்புகளையும், துணுக்குச் செய்திகளையும் ஓரங்களில் வெளியிட்டுள்ளார்.

நாள்காட்டியின் அடியில் திருவள்ளுவரது படத்தை வெளியிட்டு தோன்றின் புகழொடு என்ற குறளையும் அச்சாக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டு புதிய சிந்தனையோடு புதியன ஆக்கிப் புகழ்பெற நாமும் வாழ்த்துகிறோம்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,