கையடக்க செய்முறை மருத்துவ நூல்

7 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் உடைய கைடக்க நூல் இது. 380 பக்கங்களில் இயற்கை வைத்திய முறையானது விளக்கப்பட்டுள்ளது. செய்முறையாக எப்படிச் செய்வது என்பதும் குறிப்பிட்டுள்ளது. சுத்தி முறைகள், மாத்திரை முறைகள், சூரண முறைகள், லேகிய முறைகள், எண்ணெய் முறைகள், பற்ப முறைகள், செந்தூர முறைகள், கிருத முறைகள், கட்டு முறைகள், மெழுகு முறைகள், வடக முறைகள், ரசாயன முறைகள், திராவக முறைகள், சர்பத் முறைகள், பலரோக முறைகள் என ஒவ்வொரு தலைப்பிலும் - பொருள்கள் - செய்முறைகள் - பயன்பாடு என்பதை சுருக்கமாகத்தந்துள்ளது. கைடக்க அளவில் பையில் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்ற நிைவே நோய்வராது தடுக்குமல்லவா ?


எடுத்துக்காட்டு : உஷ்ணந் தீரக் கியாழம் : தனியா, பரஞ்கிச் சக்கை, நன்னாரி வேர், சோம்பு வகைக்கு பலம் 1 நிறுத்தெடுத்து கால்படி ஜலம் விட்டு அரிக்கால்படி கியாழஞ்செய்து பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட எப்படிப்பட்ட சூடுந்தணிந்து விடும். இப்படி 2,3 வேளை செய்யவும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,