இதழ் அனுப்பும் உறையில் திருக்குறள்

குந்த குந்கா நகரிலிருந்து வெளிவருகிற சமண சர்புடைய இதழ் சுருதவேலி. பதிவுபெற்ற இதழாகத் திங்கள் ஒருமுறை இந்த இதழ் வெளிவருகிறது. சமண வரலாற்று ஆராய்ச்சிக் குறிப்புகள், கட்டுரைகளை இதழில் வெளியிட்டு வருகிறது. இதழில் வரும் துணுக்குக் குறிப்புகள் வாழ்வியலுக்குப் பயனாகுபவை.

இந்த இதழின் அஞ்சல் உறை படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்த உறையில் இரண்டு திருக்குறளும், அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளன. குறளின் பெருமையை அஞ்சல் உறையில் வெளியிட்டு அனைவரும் படிக்க வைக்கிற இந்த இதழின் செயல் வணங்குதற்குரியது அல்லவா ?.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,