1915 கிருஷிகன் இதழ் குறிப்பிட்டுள்ள நவீன தமிழ் நாவல்கள்

1915 சூலை 16 கிருஷிகன் இதழில் ( புத்தகம் 7, பிரதி 4) நவீன தமிழ் நாவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. கிருஷிகன் இதழ் திங்கள்தோறும் வெளியான வேளாண்மை இதழ். இதழின் பின் அட்டையில் ஆர்.கே.சர்மா அண்டு கம்பெனியின் விளம்பரமாக கீழே காணும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


பெரும்பாலான நாவல்களின் தலைப்புகளே தமிழில் இல்லை. 1917 இன் நிலைமை இது. இன்றைய சூழலில் மக்கள் நலம் பேசும் பல நாவல்கள் வெளியாவதைக் காணும் பொழுது தமிழ் வளர்நிலையில் இருப்பதை உணரமுடியும்.

1940, 50, 60 களில் விதைக்கப்பட்ட தரமான விதை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் மாற்றத்தின் விளைச்சல் அரசியல் வழியில் சுருங்கிப்போனதால், தமிழின் நிலை பாதைமாறிச் சென்று கொண்டிருந்தது. 2005 இல் மீண்டும் தமிழுணர்வை முன்னெடுக்கிற தன்மை முனைப்போடு தொடங்கியுள்ளது. வரலாறு திரும்பியுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து இயங்க வரலாறு திருத்தி எழுதப்படும்.. இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை விதைப்பதோடு, தமிழுணர்வை விதைக்கத் தமிழ் மேலோங்கும். வளர்நிலை காட்டும். தமிழ் இனி வளரும் எனச் செயலாற்றுவோம்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,