முரசு வார்க் கட்டு (முரச பந்தம்)

நான்கடிகள் கொண்ட ஒரு பாடலை எழுதி, அப்பாடலைப் படத்திற் காட்டடியபடி முரசு வார்களின் மேல் எழுத வேண்டும். பாடலுக்குரிய நான்கு அடிகளுள், முதலிரண்டு அடிகளைத் தமமுட் பசுநீர்த் தாரையாகவும், அதே போலப் பின்னிரண்டு அடிகளைத் தம்முட் பசுநீர்த் தாரையாகவும், பாடலை அமைக்கவேண்டும். அதேசமயம் நான்கு அடிகளையும் முதலடி தொட்டுக் கடையடி ஈறாய், மேலிருந்து கீழ் இழிந்தும், கீழிருந்து மேல் நோக்கியும், தத்தம் வார்கள் போக்கிய வழியிற் சென்று படித்தாலும் ஒரு பசுநீர்த்தாரை அமைப்புக் கிட்டிப் பாடலடிகள் கிடைக்கப்பெறும்.

பாடல்

நாதமு தீநய மேதரு முரசே !
காதமு தீநய மேதரு முரசே !
போதமு தீநய மேதரு முரசே !
நாதமு தீநய மேதரு முரசே !

நாதமு தீநய மேதரு முரசே ! - நாதம் என்று சொல்லப்படுகின்ற இன்னொலியை எழுப்பி உள்ளத்திறகு இனிமையான நய உணர்வை ஊட்ட வல்லது முரசு என்னும் தோற்பறைக் கருவியாகும்.

காதமு தீநய மேதரு முரசே ! - செவிகளுக்கு அமுதினை யொத்த தித்திக்கும் இசை நயத்தைக் கொடுக்க வல்லது முரசென்னும் கருவியாகும்.

போதமு தீநய மேதரு முரசே ! - ஏழிசை மற்றும் தாளங்கள் என்னும் இசைக்குரியதான இரண்டு கூறுகளில் ஒன்றான, தாளக்கூறு சார்ந்த அறிவினைத் தரத்தக்கது முரசென்னும் கருவியாகும்.

இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும். நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,