உள்நாட்டு அஞ்சலில் ஓர் இதழ்

1981 டிசம்பரில் உதகையிலிருந்து நந்தலாலா அவர்களால் தொடங்கப்பட்டது. இது இரண்டாவது இதழ். உள்நாட்டு அஞ்சலில் அச்சாக்கப்பட்டது இந்த இதழ். 4 ஆவது இதழ் நீள வடிவத்தில் தொடர்ந்தது, 8ஆவது இதழிலிருந்து 16 பக்கங்களில் 1/8 அளவில் தொடரப்பட்டது. இதன் ஆசிரியர் நந்தலாலா, திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்....

"பிரியமுள்ள ஐயாவுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய இந்த சின்ன முயற்சிக்கு வாழ்த்து சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையதே. காப்பி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான். எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே. அன்புடன் நந்தலாலா - 19-1-82, ஜே.எஸ்.எஸ்.கல்லூரி, ராக்லேண்ட், உதகை."


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,