தங்க முலாம் பூசிய திருக்குறள் நூல்

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தர்ளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே. தொடர்புக்கு :- திரு. அழகப்பா ராம்மோகன், திட்ட இயக்குநர், உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,