புகைப்படப் பக்கம் வரிசை எண் : 19
|
புகைப்படக் கலைஞர் : அபுதாபியிலிருந்து கமால்பாஷா
யானையின் மீது ஏறி
தலைகவிழ்ந்த நாய்
உணவைத் தேடி
புரட்டுகிறது,
பொது இடத்திலுள்ள
யானையின் முதுகில்
குப்பை கூளங்களை
மக்கள் குவித்தனர்.
துறைமுகங்களில்
அழகாக அமைக்கப்பட்ட
கண்டெய்னரில்
குப்பை கூளங்கள்
கப்பல்களிலிருந்து
இறங்குகின்றன.
வளரும் நாடுகளில்
நாயாய் மனிதன்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : அபுதாபியிலிருந்து கமால்பாஷா
வாய்க்கு எட்டும்
உயரத்தில்
கொத்துக் கொத்தாய்க்
கவிழ்ந்து கிடந்தன
பேரீட்சைகள்,
அதன் அனுமதி
இல்லாமல் நானும்
என்அனுமதி
இல்லாமல் அதுவும்
எதுவும் செய்ய இயலாது,
இருந்தாலும்
நாங்கள் இருவரும்
அருகருகே
காட்சிப் பொருளாக,
|
|
|
புகைப்படக் கலைஞர் : சிவா பிள்ளை - இலண்டன் - கோல்ட்ஸ்மித் பல்கலைக் கழகம்
கடல் மேல்
பாலம் போட்டு
அதன் மேல்
ஊர்தி ஓட்டி
நினைப்பதை
உடனுக்குடன்
செய்து முடிக்கும்
மனிதனது
ஆற்றல்...
மதத்தின் முன்
சுருங்கி விடுகிறது
கூட்டுக்குள் நத்தை
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
தலைவிரி
கோலமாய்
ஏமாற்றும்
சாமிகள்.
குழந்தையும்
தெய்வமும்
கொண்டாடும்
இடத்திலாம்.
ஏமாற்றாத
குழந்தையை
எப்படியெல்லாம்
இணைக்கிறான்
பார்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
இரவு 1.10 க்கும்
உறங்காத விழிகள்
கணினித் திரைக்குள்
தேடித் தேடி
அலுத்துப்போய்
சோர்வாகின்றன
கணினி சார்ந்த
பொருள்களின்
விற்பனை கூடுகிறது
நிறையும் பை
யாருடையது ?
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
புத்தகங்கள்
உயிருடையவை
மனிதன் வாழும்
வரை அவனோடு
வாழ்ந்து அவனுக்குப்
பிறகும் வாழும்
தன்மை உடையவை
மனிதன் தான்
அவற்றை
உடன்கட்டை
ஏற்றுகிறான்
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
உறுதியற்ற தண்டு
பச்சைப் பசேலென்று
நீண்டு ஓடி
விரைவில் வளர்ந்து
உணவாகிப்
பலருக்கும்
பயனாகும்.
எத்தனை நாள்
வாழ்ந்தோம்
என்பது
கணக்கில்லை....
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
அகண்டு
கிளைவிரித்துப்
பரப்பி
அழகூட்டி
அனைத்துயிர்க்கும்
உயிர்வளி
கூட்டும்
இவைகள்
கேளாமல்
நலம் தரும்
உயிரூக்கிகள்
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
நல்ல கட்டடம்
நல்ல தண்ணீர்
நல்ல கழிப்பறை
நல்ல வகுப்பறை
ஈராசிரியர்களோடு
தொடக்கப்பள்ளி
நிறைவாகவே
இருக்கிறது.
ஒரே ஒரு குறை
மாணவர்கள்தான்
இல்லை
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
ஆழமாகச் சென்று
நிமிடத்துளிகளை
வீணாக்காது
தொடர்ந்து
உறுஞ்சிக்
குடிநீரை
மேலெடுக்கின்றன
வேர்கள்.
வீணடிக்கின்றன
இலைகள்.
அப்பாவும் மகனும்
|
|
|