புகைப்படப் பக்கம் வரிசை எண் : 17
 |
காலம் மாறும்
காட்சிகள் மாறும்
மேலிருப்பது கீழ்
கீழிருப்பது மேல்
சுழலுகிறது
சக்கரம்,
முப்பத்தைந்து
ஆண்டுகளுக்குப்
பிறகு
பொங்கல்விழா.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
உண்மையல்ல
நிழல்....
நிழலும் கூட
கரடுமுரடான
கல் பாதையில்
வாழ்க்கை
பட்டு
மெத்தையில்
செம்மையாவது
இல்லை.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
இயற்கை
எண்ணில்
அடங்காச்
சொத்துகளுடன்.,
மனிதன்.....
ஒவ்வொரு
நிமிடமும்
சொத்துகளை
அழித்துச்
சொத்தை
சேர்க்கிறான்.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
காணி நிலம்
வேண்டும்
பராசக்தி
காணி நிலம்
வேண்டும்.
அந்தக் காணி
நிலத்திடையே
ஓர் மாளிகை
கட்டித் தர
வேண்டும்.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
ஒரு விரலுக்கு
இரண்டு
மோதிரங்கள்..
கையில்
அலைபேசி..
அருகிலேயே
கணினி..
வணிகமாகிய
மனிதன்.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
ஆலும்
வேலும்
பல்லுக்குறுதி
நாலும்
இரண்டும்
சொல்லுக்குறுதி
மழலையிடம்
விதைக்க
வேண்டியவை.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
மென்மையான
சிகப்பு
இளங்குருத்து
தடித்த பச்சை
இலையாக
மாறுவது
இயற்கை...
காலம் இதை
நிகழ்த்துகிறது.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
உயர்ந்த
கட்டடங்கள்..
அகன்ற
சாலைகள்..
பரபரப்பு..
நகர
நாகரீகம்..
இல்லாத
நகரம் எது?
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தாம்பரம் ஆனந்த் - சென்னை.
ஒவ்வொரு நாளும்
நெருப்புப் பந்தாய்
எழுவதும்
விழுவதும்
அதன் இயல்பு.
நெட்டை மரமென
நின்று புலம்புவது
மற்றதன் இயல்பு.
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
பூக்களின் அழகு
அதனதன்
இருப்பிடத்தில்.
விலைபேசி
கயிறால் கட்டி
சிதைப்பவன்
மனிதனா ?
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி. (சிவாபிள்ளை அனுப்பிய Sony - Cyber shot 6.0 புகைப்படக் கருவியில் எடுக்கப்பட்ட படம்)
முகத்தில்
தெரியுது
வீரம்
உடலில்
தெரியுது
வலிமை
கருப்பு
எப்பொழுதுமே
வீறுடையதுதான்
|
|
 |
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி. (சிவாபிள்ளை அனுப்பிய Sony - Cyber shot 6.0 புகைப்படக் கருவியில் எடுக்கப்பட்ட படம்)
நிஜத்தைவிடவும்
இந்த
நிழல்
அழகாக
இருக்கிறது
இப்படித்தான்
அனைத்திலும்
ஏமாறுகிறது
உலகம்
|
|
|
|