புகைப்படப் பக்கம் வரிசை எண் : 15

புகைப்படக் கலைஞர் : இரா. இரவி - மதுரை
இன்றைய
கலைஞர்களின்
வண்ணக்
கோலத்தில்
அன்றைய
கலைஞர்கள்
கட்டிய
திருமலையார்
அரண்மனை -
மதுரையின்
மணிமகுடம்

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம், நொய்டா, உ.பி
குப்பையோடு
குப்பையாய்
குப்பையைக்
கிளரி
குடும்பம்
நடத்தும்
இவர்
இந்தியாவின்
மன்னர்களில்
ஒருவர்.

புகைப்படக் கலைஞர் : இரவிக்குமார் - கோவை
உண்டு உறங்கி
எழுந்து நடந்து
உண்டு உறங்கி
எழுந்து நடந்து
எதைச் செய்தோம்?
எதைச் செய்வோம்?
என்று எழுவோம்
என்று நடப்போம்

புகைப்படக் கலைஞர் : இரவிக்குமார் - கோவை
உழைத்துக்
களைத்து
உண்ணும்
சோறு..
சூழல் மறந்து
ஒருவாய்ச் சோறாய்
ஆறிய கஞ்சியாய்
அலசிக்
குடிக்கினும்
அதுவே உணவு.

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம், நொய்டா, உ.பி
சுட்டெரிக்கும்
சூரியனா?

சுகம் தரும்
குளிர் நிலவா?

குச்சியில்
கோர்த்த
ஒளிர் நிலவா?

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம், நொய்டா, உ.பி
நிழற்படம் தான்
நிழல்களே
படமானால்
நிழல் எது?
படம் எது?
தொழில்
நுட்பக்
கலைஞரிடம்
கருவியும்
விழிபிதுங்கும்
பெங்களூரில் திறக்கப்படாமல் இருக்கும் திருவள்ளுவர் சிலை - நன்றி : பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்.
வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து
வான்புகழ்
கொண்ட
தமிழ்நாடு.
கர்நாடகாவுக்கு
இது
பொருந்தாது.
கர்நாடகாவும்
இந்தியாவில்.
புகைப்படக் கலைஞர் : செந்தமிழினியன், புதுச்சேரி
வேலி முள்ளும்
மாங்கொட்டையும்
குச்சிகளும்
கலைஞனின்
கையில்
உயர்பெற்று
எழும்
துடிப்பு காட்டும்
வெட்டுபவன்
கையில்
உயிருள்ள ஆடும்..
புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம், நொய்டா, உ.பி
கணினிக்குள்
புகுந்த
கண்கள்
ஓய்வெடுக்க
வேண்டும்.
வேற்று
மாநிலத்தில்
சாதனை
படைக்கும்
நம்மவர்களின்
எளிமைத்
தூக்கம்.

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,