புகைப்படங்கள்
தொகுப்பு 12
புகைப்படக் கலைஞர் : பொள்ளாச்சி நசன்.
அன்று ஆங்கிலேயன்
நுட்பமாய்க் கட்டிய
கட்டடக் கலைக்குச்
சான்றாக ஊட்டி
அரசுக் கலைக்
கல்லூரியில்
நிமிர்ந்து நிற்கும்
கல்லூரிக் கட்டடம்
புகைப்படக் கலைஞர் : பொள்ளாச்சி நசன்
மலைமீது
அடுக்கிக்
கட்டப்பட்ட
கட்டடங்கள்
பிடுங்கி
எறியப்பட்ட
மரங்களைக்
காட்டுமா?
மக்களது
உயர்வு காட்டுமா?
புகைப்படக் கலைஞர் : பொள்ளாச்சி நசன்.
சமணர்கள்
வாழ்ந்த
வரலாற்றுச்
சுவடாம்
திருமூர்த்தி
மலையின்
மலைப்புத்
தோற்றம்.
புகைப்படக் கலைஞர் : இரா. இரவி - மதுரை.
மதுரை
திருமலை
நாயக்கன்
அரண்மனைச்
சுவற்றில் உள்ள
கண்கவரும்
சுதை உருவம்.
கட்டடக்கலைச்
சிறப்பிற்குச்
சான்றாதாரம்
புகைப்படக் கலைஞர் : பொள்ளாச்சி நசன்.
கல்லூரி
வளாகமல்ல..
கோவை
டாடாபாத்தின்
மாநகராட்சித்
தொடக்கப்பள்ளி
வளாகம்.
புகைப்படக் கலைஞர் : ரமேஷன் - வடவள்ளி.
பொற்கோவில்
சீக்கியர்களின்
புனித இடம்.
நான் - இழந்து
மிதியடிகளைத்
துடைத்து
மனிதம் காட்டும்
புனித இடம்.
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
வெறுங்கை என்பது
மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும்
மூலதனம்.
கருங்கல் பாறையும்
நொறுங்கி
விழும் - உன்
கைளில் பூமி
சுழன்று வரும்.
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
வளைந்த தகடு
ஒன்றுடன் ஒன்று
இணைந்திட
அதுவே
காப்பரணாகும்.
நிமிர்ந்த
மனிதன்
வளைவதும் இல்லை
இணைவதும் இல்லை
பாதுகாப்பு.?
புகைப்படக் கலைஞர் : இரா.இரவி - மதுரை.
கையது கொண்டு
மெய்யது போர்த்திக்
காலது கொண்டு
மேலது தழுவி.....
வறுமை அன்று
மட்டுமல்ல
என்றும்
இருக்கும்...
புகைப்படக் கலைஞர் : இரா.இரவி - மதுரை.
நீர்
நிறைந்து
இருந்தது
அன்று...
மக்கள்
பெருகி
நீருக்காய்
அலைவது
இன்று...
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,