இணையத்திற்கு வந்த நூல்கள் - 10

வாழ்வியல் வளங்கள்

அ.ஆறுமுகம்

பாவேந்தர் பதிப்பகம்,
4/79 சீரகம், திருமழபாடி,
அ.கு.எண் : 621 851

விலை : ரூ 40.

பழந்தமிழர் வாழ்வில் உற்பத்தி முறைகள், தமிழன் கண்ட அகமும் புறமும், சங்க இலக்கியத்தில் களவு, தமிழ் நூல்களில் தமிழர் ஆரியர் போராட்டம், திருக்குறள் காட்டும் தமிழ் நெறி, முந்நெறிகள், தம்தம் வினை, தந்தை பெரியார் அவர்களின் திருக்குறள் தொண்டு, கம்பனும் வான்மீகியும், பாவேந்தரின் தமிழியக்கம், ஏற்றப்பாட்டு என்கிற கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

ஈழத் தமிழரைக் காப்போம்

வைகோ

Thamilini pathippagam,
112, Nickley Street,
London SW 17 9 NE,
United Kingdom

விலை : ரூ 25.

ஈழத் தமிழரைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் 29-12-2005 பெரியார் திடலில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில், பழநெடுமாறன், இராமதாசு, வீரமணி, வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளக்கவுரையாக வைகோ அவர்கள், ஈழத்தமிழர்களது இன்றைய நிலை குறித்து விளக்கி, விடியலுக்கான இன்றியமையாமையை எடுத்துரைத்தார். அந்த வரலாற்றுச் சொற்பொழிவின் நூல் வடிவம் இது.

தமிழ் நாடா?
'தமிழ் நடு'வா

அருணகிரி

தன்னம்பிக்கை
தன்னார்வ அறக்கட்டளை
திருவாசி,
மண்ணச்சநல்லுார்

விலை : ரூ 10.

தமிழ் நாட்டில் தமிழ் இல்லை, பேச்சு மொழி, பயிற்று மொழி, ஆட்சி மொழி என எதுவுமே தெளிதமிழாக இல்லாமல், கலப்பு மொழியாகிப்போனதைச் சுட்டிக்காட்டுவது,

தமிழுணர்வு மேலெழ எப்படியெல்லாம் இயங்க வேண்டும் என்கிற நுட்பமான குறிப்புகளை உடைய நூல் இது.

இளைஞரின் எழுச்சிமிகு வரிகள் இவை. இயங்குகிற தமிழ் அமைப்புகளின் முகவரிகளையும் வெளியிட்டுள்ளது.

நெஞ்சத்தில் ஹைகூ

இரா. இரவி

6.தாளமுத்துப் பிள்ளை சந்து
வடக்கு மாசி வீதி,
மதுரை - 625 001.

விலை : ரூ 25.

பக்கத்துக்கு ஒரு புகைப்படம் எனப் படங்களுடன் வீச்சுடைய அய்க்கூ கவிதை நூல். இது ஆசிரியரின் ஆறாவது நூல்.

சாதி ஒழிப்பு
மாநாடு நடந்தது
சாதிச்சங்கக் கட்டடத்தில்

தினமும் குத்துகின்றனர்
விடுதலை தந்த காந்தியை
அஞ்சல் தலையில்.

என்னவள்

இரா. இரவி

6.தாளமுத்துப் பிள்ளை சந்து
வடக்கு மாசி வீதி,
மதுரை - 625 001.

விலை : ரூ 25.

ஆசிரியரின் ஐந்தாவது நூல். உரைவீச்சுகள் உடையது. படைப்பாளி ஒரு புகைப்படக் கலைஞராகவும் இருந்து எடுத்த படங்கள் நூலுக்குக் கூடுதல் சிறப்பளிக்கின்றன.

என்னவளே என விளித்து, அன்னவளின் பல்வேறு நினைவலைகளை நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

இல்வாழ்வு -
இன்பியல்

ப.அருளி,

ஆய்வறிஞர், தலைவர்
தூயதமிழ் - சொல்லாக்க அகரமுதலிகள் துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர் 613 005

விலை : ரூ 25.

குறட்பாவின் 27 அதிகாரங்களுக்குள் அடங்கியிருக்கும் 270 குறட்பாக்களுக்கும் உணர்ந்து கண்டு நான் எழுதியுள்ள ஓர் உரையாக்கம். இவ்வுரை ஆக்கத்தினுள், ஒருபத்தாண்டுக்கும் மேற்பட்ட இளங்கால மனத்து ஓட்டங்களும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலனவாகி ஓடிக்கொண்டிருக்கும் இல்லறத்து ஈடுபாடும், ஐம்பானாண்டுகளுக்கும் மேற்பட்ட கல்விச் செலவும் - பட்டறிவுகளும் - பாவலரேறு - பெருஞ்சித்திரனார் போன்ற தெளிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பால் ஒன்றியறிந்த நுண்ணுட்பொருள் காணும் தெள்ளறிவுப் பேறுகளும் உட்புலப்பதிவுகளாக ஊடோடி உள்ளன - அருளி.

நம் செம்மொழி

ப.அருளி,

வேரியம் பதிப்பகம்,
அகராதியகம்,
502(466) வழுதாவூர் சாலை,
முத்தரையர்பாளையம்,
புதுச்சேரி - 605 009

விலை : ரூ 25.

செம்மொழி தொடர்பான பல்வேறு கூறுகளை நுட்பமாக அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ள நூல். சொல் ஆய்வு அறிஞரான இவரது இந்த நூல் செம்மொழிக்கான சான்றாதாரங்களைக் காட்டுவதோடு, தமிழ்ச் சொற்கள் இத்தனை வளமுடையவையா என வியக்கும் வகையில் ஒப்புநோக்கிக் காட்டப்பட்டுள்ளது. செம்மொழிக்கான நுட்பத்தைப் புதிய கோணத்தில் சிறப்பாகக் காட்டுகிற உயரிய நூல் இது.

குடையின் கீழ் வானம்

வதிலை பிரபா,

செல்லம்மாள் கண்ணன்,

ஒற்றைத் தெரு
வத்தலக்குண்டு
விலை : ரூ 30.

35 அய்க்கூ கவிஞர்களின் படைப்புகளைப் பெற்று ஒரு பக்கத்திற்கு ஒருவர் என அவர்களது படைப்புகளை வரிசைப்படுத்தித் தொகுத்து வெளியிட்டுள்ள அய்க்கூத் தொகுப்பு நூல் இது. படைப்பாளிகளுக்குச் சுதந்திரம் கொடுத்து அவர்கள் எழுதியுள்ளதைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். தன்படைப்பினை அச்சில் பார்த்து மகிழத் துடிக்கும் இளைய படைப்பாளிகளுக்கு இதுபோன்ற முயற்சிகள் வழிகாட்டுவதாக இருக்கும்.

தமிழ் அறிவோம்

வெ.மாசிலாமணி

பகலவன் பதிப்பகம்,
மாதா கோயில் தெரு,
இளங்காடு - 604 408
வந்தவாசி வட்டம்
தொடர்புக்கு
(04183) 226046
விலை : ரூ 5.

புலவர் வெ.மாசிலாமணி அவர்கள் முயற்சியால் தொகுக்கப்பட்ட தெளிதமிழ்ச் சொற்களின் தொகுப்பு நூல். பழக்கத்திலுள்ள 400க்கு மேற்பட்ட ஆங்கில மற்றும் அயற்சொற்களுக்கான தெளிதமிழ்ச் சொற்களை சிறப்பாகத் தொகுத்துள்ளார். முன்னுரையாக பாவணரின் வாழ்க்கைச் சரித்திரத்தை வெளியிட்டதோடு, பின் பக்கத்தில் கல்லூரிப் படிப்பிற்கான தெளிதமிழ்ச் சொற்களையும் வரிசைப் படுத்தியுள்ளார். பாவணரின் நினைவையொட்டி 15-1-81 இல் வெளியிடப்பட்ட இந்நூல் இன்றும் தேவைப்படுகிறது.?!?

உயிர்த்துவா தமிழா

காரை மைந்தன்

விழுதுகள் வெளியிடு
8.தென்கரைவீதி, கோட்டுச்சேரி,
காரைக்கால். 609 609
விலை : ரூ 10.

வேர் இழந்து மரம் வளர்வது இல்லை, அச்சாணி சுழன்று தேர் ஊர் சேர்வதில்லை. தமிழர்கள் தன் இன, மொழி, வரலாறு மறந்து உயர்வதற்கில்லை என முன்னுரையில் எழுதி, தெளிதமிழ்ச் சொற்கள், குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், தமிழருக்கான அடையாளங்கள், தமிழர் வரலாறு என 64 பக்கங்களில் மொழி குறித்த முதன்மைச் செய்திகளை வரிசைப்படுத்தித் தொகுத்துள்ளார்.

மாற்றுப் பாதையில்
செல்லவும்

சகாரா

நா. அருள்முருகன்
46 / 25 வ.உ.சி.தெரு,
எருமைப்பட்டி அஞ்
அ.கு.எண் - 637 013
(04286) 252108
விலை : ரூ 25.

உரைவீச்சுகளின் தொகுப்பு நூல். இயற்கையை உற்று நோக்கி, நடக்கிற நிகழ்வுகளை உற்று நோக்கி, ஒடுக்கப்படுகிற, ஒடுக்குகிற நிலையை உற்றுநோக்கி - அதனை மிகநுட்பமாக, உண்மைத் தன்மையோடு பதிவு செய்துள்ளார். கந்தகம் உரைவீச்சில் ஒரு பிடி சோற்றுக்காக அலைவதைக் காட்டி, இறுதியில் ஆயி வருத்தத்தோடு "ஏங்கண்ணு பசிக்குதா என்று கேட்க" "இல்லை" என்று சொல்லும் பொழுது கண்கள் பனிக்கின்றது.

பொன்னி
ஆசிரியவுரைகள்

முனைவர் மு.இளங்கோவன்

வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு, உள்கோட்டை,
கங்கைகொண்ட சோழபுரம்,
பெரம்பலூர் மாவட்டம்
விலை : ரூ 130.

முருகு சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் ஆகியோரின் பொறுப்பில் வெளிவந்த பொன்னி (1947 - 53) இதழ் வரலாற்றில் இடம் பெற்ற சிறந்த இதழாகும். இந்த இதழில் அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும் இயங்கி உள்ளனர். இலக்கியத் தரம்மிகுந்த இந்த இதழின் ஆசிரியர் உரைகளை மட்டும்(98 உரைகளை) தொகுத்து வெளியிடப்பட்டதே இந்த நூல். புதுக்கோட்டையிலும், சென்னையிலும் வெளிவந்து சாதனை படைத்த இதன் வரலாறு முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றே.

நோய் எதிர்ப்பியல்

மருத்துவர்
ஐ.சிவசுப்ரமணிய ஜெயசேகர்

தமிழ் யாழினி பதிப்பகம்,
நாச்சியார் கோயில்,
கும்பகோணம். 612 601
விலை ரூ75

மருத்துவ முதுவர் தேர்வைத் தமிழில் எழுதிய ஆசிரியரின் நூல் இது. இந்நூலில் நோய் எதிர்ப்பியல், எதிர்ப் பொருள் தூண்டிகள், இமுனோ குளோபின், நிரப்பிகளின் முறைமை, எதிர்ப்பொருள் விளைவுகள், நோய் எதிர்ப்புத் திறன் முறைமைம, ஒவ்வாமை, தன்னுயிர் எதிர்ப்பு நோய்கள் போன்ற பத்து தலைப்புகளில் தரமான தமிழிலமைந்த கட்டுரைகள் உள்ளன. மருத்துவத் துறையில் வளர்ந்து வருகிற புதிய புதிய ஆக்கங்களுக்கெல்லாம், இவர் கலைச் சொல்லாக்கங்களைத் தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன் - நசன் -

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,