|
இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்கட்டுரைத் தொகுப்புஏ.பி. வள்ளிநாயகம், ஜீவசகாப்தன் பதிப்பகம், திருமூலர் வீதி, அலமேலு நகர், ஆலங்குளம், மதுரை 17 பேசி : (0452) 2524441 விலை ரூ 50 |
|
ஆசிரியர் தலித் முரசில் தொடராக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளதே இந்நூல். இன்றைய கருத்தியலுக்குப் பெரியாரின் முதன்மையைச் சுட்டிக்காட்டுவதே இந்நூல். பல்வேறு படிநிலைகளில் ஆய்ந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் பெரியார் களஞ்சியத்திற்குச் சிறப்பூட்டுவதே. சாதியால் கட்டுண்டு அலைக்கழிக்கப்படுகிற இச்சூழலில் சாதிபற்றிய சரியான விளக்கத்தையும், தாழ்ந்தசாதி மக்கள் பட்ட / படுகிற நெருக்குதலையும் இந்நூல் சிறப்பாகக் காட்டுகிறது. |
பிறந்த மண்ணின்
ஆசிரியரின் பார்வைப்பதிவு |
|
ஆசிரியர் பிறந்து வளர்நத ஊரான சாத்தநத்தம் பற்றிய குறிப்புகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். மக்களது வாழ்முறை, வணிகநிலை, நிகழ்வுகள் என இவர் பதிவுசெய்துள்ளது படிப்பவருக்குத் தன் ஊரினை எண்ணிப் பார்க்கத் தூண்டும். தமது ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் உள்ள தொடர்புகளைச் சுவையோடு சுட்டுகிறார். தான் படித்த பள்ளி, உறவினர்கள் எனக் காட்டுவதோடு நிறைவாக ஏற்றப்பாட்டினையும் இணைத்துள்ளார். |
அகமும் அழகும்கட்டுரைகளின் தொகுப்புமுனைவர் அ.ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், 4/ 9 சீரகம், திருமழப்பாடி, அ.கு.எண்: 621 851 பேசி : (04329) 243245 விலை ரூ 40 |
|
கருத்தரங்குகளில் படிக்கப்பட்டதும், இதழ்களில் வெளியானதுமான தமிழ் இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய நூல். சங்க இலக்கியங்களின் அறிமுகக் குறிப்பாக, சுவைத்த துளிகளாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள், படிப்பவரைச் சங்கஇலக்கியம் படிக்கத்தூண்டவேண்டும் என ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது வாழ்த்துதற்குரியது. எளிய நடையில் சுவையுடன் எழுதப்பட்டுள்ளது இந்நூல். |
சும்மாஉரைவீச்சுகளின் தொகுப்புமா.நயினார், கோகுலம் வெளியிடு, 20\2816, அம்மன் கோயில் சமீபம், கரமனை. திருவனந்தபுரம், 695 002 பேசி : (0471) 2344938 விலை ரூ 30 |
|
ஆசிரியர் கண்டு நெகிழ்ந்தவற்றின் உரைவீச்சுத் தொகுப்பு. |
ஊமையாகும் உணர்வுகள்உரைவீச்சுகளின் தொகுப்புகாரை மைந்தன் விழுதுகள் வெளியிடு, 8.தென்கரை வீதி, கோட்டுச்சேரி, காரைக்கால் 609609 விலை ரூ 35 |
|
வானொலியிலும், |
மீண்டும்அய்க்கூக்களின் தொகுப்புபொன். குமார் கனிமொழி, 21\15 புது திருச்சிகிளை வடக்குத்தெரு, லைன்மேடு, சேலம் 636 006 பேசி : 98658 09969 விலை ரூ 15 |
|
சிற்றிதழ்களோடு அதிகத் தொடர்பு உடையவர் பொன்.குமார். இவரது அய்கூக்கள்
அனைத்துச் சிற்றிதழ்களிலும் வெளியாகும். அப்படி வெளியான பாடல்களைத் தொகுத்து
நூலாக்கியுள்ளார் இவர். |
சங்கத் தமிழ் மாலைகட்டுரைகளின் தொகுப்புபுதுவைத் தமிழ்ச் சங்க வெளியிடு தமிழ்ச் சங்க வீதி, வெங்கட் நகர், புதுச்சேரி 11 |
|
சங்க இலக்கியம் பற்றிய 44 ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட தரமான நூல். சங்க இலக்கியப் பாடல்களைப் பல்வேறு கோணங்களில் நுட்பமாகப் பதிவுசெய்துள்ள தரமான நூல். நினையாரோ தோழி என மன்னர் மன்னன் எழுதியிருப்பது போல இந்நூல் பற்றி நினைக்காமல் இருந்து விடுமோ இந்தத் தமிழுலகம். கட்டாயம் நினைக்கும், பேசும், பதிவுசெய்யும். |
காவிரி
எஸ். கிருஷ்ணசாமி |
|
தமிழகம் விரைவில் காவிரியை இழந்து விடும். மக்கள் நீருக்காக அலையவேண்டிய நிலை வரும். அரசியலாளர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ இதுபற்றிக் கவலையில்லை. மக்களிடம் இந்தப்பிரச்சனை பற்றிய முழு உண்மையும போய்ச் சேரவில்லை. தஞ்சைக்கு மட்டும்தான் இழப்பு என்று இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் காவிரியில் நீர்வரத்து குறைந்து கொண்டே போகும். காவிரி வரண்டுவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம் இந்த நிலை நீடித்தால் தமிழகம் பாலைவனமாகும். ஓட்டு மொத்தமான விழிப்புணர்வு ஏற்பட்டாலொழிய நாம் காவிரியைக் காப்பாற்ற இயலாது.- என்பதற்கான சான்றாதாரங்களுடன் விளக்கும் நூல் |
தமிழ் இலக்கிய வரலாறுமுனைவர் கா.வேங்கடராமன்.கலையக வெளியிடு 193 எச் கண்டர் நகர் பரமத்தி வேலூர் நாமக்கல்(மா) 638 182 விலை : ரூ 80 |
|
தமிழ் இலக்கிய வரலாற்றினை மிகச் சிறப்பாகவும், சுவையாகவும் வரிசைப்படுத்தியுள்ளார். இவரது நூல் தமிழ் இலக்கிய வரலற்றின் முழுமைகாட்டும். இவரது நூலைப் படித்த பிறகே, தமிழுக்காகச் செய்யவேண்டிய பல்வேறு செயற்பாடுகள் என்முன் நிழலாடின. பாதுகாக்கப்படவேண்டிய அருமையான நூல் - பொள்ளாச்சி நசன் - |
முல்லை ஓர் அறிமுகம்அ.இரா. வேங்கடாசலபதிமுல்லை பதிப்பகம், 323/10 கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 40 விலை : ரூ 18 |
|
1940 களில் இலக்கியத் தடம் பதித்த முல்லை இதழில் தொகுப்பு நூல் இது. ஆசிரியர் முல்லை முத்தையா. பாரதிதாசனை முதன்மைப்படுத்திக் கவிதைகளை வெளியிட்டுள்ளது. 12 இதழ்களையும் ஒரு தொகுப்பு மலரையும் முல்லை இதழ் வெளியிட்டுள்ளது. புதுமைப் பித்தன், கு.அழகிரிசாமி. லா.சா.ரா போன்ற இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளை இதழ் வெளியிட்டுள்ளது. |
விடியலை நோக்கிகொங்கு மண்டல ஆய்வு மையம்மூன்றாம் மொழிப்போர் மாநாட்டு வெளியிடு அச்சமைப்பு : அ முதல் ன் வரை சேவைகள் 175 பக்கங்களில் கார்டூன் படங்கள் |
|