இணையத்திற்கு வந்த நூல்கள் - 7
|
அய்யா - சின்னத்திரை வடிவம்
தொகுப்பாசிரியர் - ஞாநி, விலை : ரூ 80, 22.பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவான்மியூர், சென்னை 41.
பெரியார் பற்றிய அறிமுகத் தொடர் - கருத்துச் செறிவோடு விதைக்கிற அருமையான
தொலைக்காட்சித் தொடர். இன்றைய சூழலில் தேவைப்படும் தொடர். பொதிகைத் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது. அய்யா படத்தின் அனைத்து உரையாடல்களும் அடங்கியது நூல். |
|
கனாக்காலம்
தொகுப்பாசிரியர் - கோவை ஞானி, விலை : ரூ 35, 24 வி.ஆர்.வி நகர்,
ஞானாம்பிகை ஆலை (அஞ்), கோவை 29.
இந்நூலில் 17 படைப்பாளிகளின் படைப்பாக்கங்களை நூலாக்கியுள்ளார் கோவை ஞானி.
திருமதி இராசேசுவரி பாலசுப்பிரமணியம் அவர்களது உதவியுடன்
பெண் படைப்பாளிகளின் படைப்பாக்கங்களை நூலாக வெளியிடும்
பணியை 1998 லிருந்து செய்து வருகிறார். |
|
மழை ஓய்ந்த நேரம்
ஆசிரியர் : இ.இசாக்
email : ishaqi74@yahoo.com,
விலை ரூ 30,
சாரல் வெளியிடு,
189. அபிபுல்லா சாலை,
தி.நகர், சென்னை 17 .
நெஞ்சில் நிற்கிற குறும்பாக்களின் தொகுப்பு நூல்.
நூலாசிரியர் தற்பொழுது அமீரகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். |
|
சோளகர் தொட்டி
விலை : ரூ 100, ச. பாலமுருகன், வனம் வெளியிடு, 17. பாவடித் தெரு, பவானி, 638 301.
email: sabalamu@rediffmail.com
தமிழ்ச் சிற்றிதழ்கள் அனைத்தும் பாராட்டுகிற நூல். ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களது
நிலையைக் காட்டுகிற அருமையான உண்மை நிகழ்வுப் பதிவு நூல். |
|
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்
Malaysian Tamil Writers Association, No.11 Jalan Murai Dua, Battu Complex, Off Jalan lpoh,
51200 - Kuala Lumpur, Malaysia. Ph: 006-013-3609989
விலை : ரூ 100
மலேசியாவிலுள்ள அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களின் புகைப்படங்கள், முகவரிகளோடு இந்த நூல்
படைப்பாளர்களை அறிமுகம் செய்கிறது. ரெ.கார்த்திகேசு மலேசிய இலக்கியம் பற்றிய அறிமுகக் கட்டுரை
எழுதியுள்ளார். பாதுகாக்க வேண்டிய நூல். |
|
மலேசியத் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
மலேசியா.விலை : ரூ 50
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பெ.இராசேந்திரன் தலைமையில் தமிழகம் வந்தபொழுது
வெளியிட்ட நூல்.
மரபுக் கவிதை (முரசு.நெடுமாறன்), சிறுகதை (ரெ.கார்த்திகேசு), நாவல் (வே.சபாபதி), கட்டுரை
(முல்லை இராமையா), புதுக்கவிதை (கோ.புண்ணியவான்), ஹைகூ (ந.பச்சைபாலன்), மேடை நாடகம்
(ரெ.சண்முகம்), வானொலி - தொலைக்காட்சி நாடகம் (பாமா) - கட்டுரைகளை எழுதியுள்ளனர். |
|
நேர்கோடுகள் சிறுகதைத் தொகுதி
ஆசிரியர் : மா. நயினார்
வெளியீடு
எண் 20-2816 கோகுலம்,
அம்மன் கோவில் சமீபம்,
கரமனை, திருவனந்தபுரம்,
அ.கு.எண் : 695 002
விலை : ரூ 60
இயல்பு வாழ்வின் நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிற
அருமையான சிறுகதைத் தொகுப்பு. |
|
பறையர் ஒரு வரலாற்றுச் சுருக்கம்
ஆசிரியர் : புங்கனூர் இராமண்ணா
வெளியீடு
தாத்தா ரெட்டமலை சீனிவாசன்
அரும்பணி மன்றம் (அறக்கட்டளை),
குறளகம், பொன்னி நகர்,
புங்கனூர், இராம்ஜிநகர் (அஞ்),
திருச்சி - 620 009
விலை : ரூ 50
பறையர் வரலாறு தமிழர் வரலாறு. ஒடுக்கப்பட்டவர் வரலாறு. மீண்டும் எழுவது எப்படி
என்கிற கருத்துகளடங்கிய தரமான நூல். |
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|