இணையத்திற்கு வந்த நூல்கள் - 6

இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?

வெளியீடு
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
27, 2 ஆவது தளம்,
கே.எம்.என்.வீதி,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை - 600 028

விலை : ரூ 5

209 குறிப்புகளின் வழி இன்றைய இளைஞர்களுக்கு வரலாறு காட்டி, அறிவுரை கூறுகிற நூல்.



சிந்து வெளியில் முந்து தமிழ்

ஆசிரியர் : பூரணசந்திர ஜீவா
தய்யல் பதிப்பகம்,
127 பாலாஜிநகர், திருவாயர்பாடி,
பொன்னேரி - 601 204.
விலை ஞ ரூ 150 (பக் 350)

சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் தான் எனச் சான்றுகளுடன் மெய்ப்பிக்கும் அருமையான நூல். ஆசிரியரின் 35 ஆண்டுக்கால உழைப்பில் உருவானது. தமிழர்கள் படிக்கவேண்டிய நூலிது.



மண்புழு நிலத்தின் உழவன்

MYRADA
வேளாண் அறிவியல் நிலையம்,
57. பாரதி வீதி, கோபி. 638 452
myradakvk@eth.net

மண்புழுவினுடைய வகை, வாழ்க்கை முறை, வளர்க்கும் முறை, உரம் தயாரித்தல் போன்ற இயற்கை வேளாண்மை தொடர்பான செய்திகளை உழவர்கள் பயன்படுத்தும் வகையில் படங்களுடன் வெளியிட்டுள்ள நூல்.



பித்தன்

ஆசிரியர் : அப்துல் ரகுமான்
நேசனல் பப்ளிசர்ஸ்,
2. வடக்கு உஸ்மான் சாலை,
தி.நகர், சென்னை 17

விலை : ரூ 30

குங்குமம் இதழ் தொடராக வெளியிட்ட பாக்களின் தொகுப்பு நூலிது. பித்தன் என்கிற "மா மனிதனின்" மறுபக்கத்தை உரசிக் காட்டுகிற உரைவீச்சுகள் இவை.



எனக்குரிய இடம் எங்கே ?
(கல்விக்கூடச் சிந்தனைகள்)

ஆசிரியர் : ச. மாடசாமி
அருவி வெளியீட்டகம்,
19, சந்தானம் நகர்,
மதுரை - 625 003.விலை : ரூ 40
web : www.aruvi.org
aruvi_ml@yahoo.co.in

வகுப்பறையை மகிழ்வூட்டுவதாகவும், கருத்து விதைப்புக் கல்விக்கூடமாகவும் மாற்றுவதற்குரிய கல்விச் சிந்தனைகள் உடைய நூல்.



மதுரைக் காஞ்சி
(பத்துப்பாட்டு - வார்ப்பிலக்கியம்)

ஆசிரியர் : பிரபாகரபாபு
3, சோலை தெரு, அயனாவரம்,
சென்னை - 23.
prabhakaar7771@rediffmail.com
விலை : ரூ 45
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம்,
2.சிங்காரவேலர் தெரு, சென்னை 17

சங்க இலக்கியக் கருத்துகளைச் சுவையாக உரைவீச்சில் தருவதோடு மூலம் காட்டுகிற - இளைய தலைமுறையினருக்கான புதுமையான வார்ப்பிலக்கிய நூல்.



ஒரு போராளியின்

புல்லாங்குழலில்


ஆசிரியர் : முத்தண்ணன்
கல் ஓசை வெளியீடு,
43 ரெங்கநாயகி நகர்,
திண்டுக்கல் - 624 005

விலை : ரூ 50

மக்களை நிமிர்த்த விரும்புகிற ஒருபோராளியின் பதிவு இது. ஒடுக்குகிற பல்வேறு கருத்தியல்களை உரைவீச்சு களாக்கியுள்ளார்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,