யுனிகோடு - எழுத்துருக்கான இலவச மென்பொருள்
NHM - writer and Converter software
and
யுனிகோடு எழுத்துருக்களைப் பயனபடுத்துவதில் எனக்குப் பல்வேறு இடர்பாடுகள் இருந்தன. சிரமப்பட்டு இதுவரை உருவாக்கி வந்தேன்.
எனக்கு வரும் மின் அஞ்சல்கள் யுனிகோடில் வரும் பொழுது இணையதளத்தில் காணக்கூடியதாகவும், சேமித்துப் பார்த்தால் கட்டம் கட்டமாகவும் இருந்து அச்சுறுத்தியது. அனுப்புகிற மின்அஞ்சல்களை தட்டச்சு செய்வதில் இடர்பாடுகள்.
சென்றவாரம் - CHAT - உலாவியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பகிர்ந்து கொள்ளும் பொழுது தமிழில் எதிராளி தட்டச்சு செய்வதைக் கண்டு வியந்துள்ளேன். சிலரிடம் கேட்டேன். எகலப்பை பயன்படுத்துகிறேன் என்றனர். அழகி. குறள். தேனீ - ஒவ்வொருவரும் ஒரு மென்பொருள் பற்றிச் சொன்னார்கள். பணம் கொடுத்து வாங்க வேண்டியவையாகச் சில. இலவசமானதாகச் சில. ஒவ்வொன்றிலும் ஏதோவொன்று இடர்பாடு உடையதாகவே இருந்தது.
சென்றவாரம் - அன்பழகன் - அவர்கள் அன்போடு தொடர்பு கொண்டார். என்னைப் பற்றிக் கேட்டார். அவர் தட்டச்சு செய்து அனுப்பியது அழகிய யுனிகோடு எழுத்துருக்கள். நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய அவர் தமிழில் தட்டச்சு செய்ய - கூனிக்குறுகினேன். உங்கள் எழுத்துரு அழகாக இருக்கிறது என்று எழுதினேன். நீங்களும் இவ்வாறு தட்டச்சு செய்ய முடியும் - இதனை வலையிறக்குங்கள் எனக் கூறினார். NHM writer software - google.com ல் தட்டச்சு செய்யுங்கள் என்றார். NHM Writer இருந்தது. வலையிறக்கினேன்.
1 எம்.பி. க்கும் குறைவான, இந்த மென்பொருள் உடனே வலையிறங்கியது. இலவசமாகப் பெற்ற அந்த மென்பொருளை நிறுவினேன். உடனே மென்பொருள் நிறுவியதோடு - கணினியின் வலது மூலையின் கீழ்ப் பட்டையில் மூக்குபோல ஒன்று தெரிந்தது. அதனைச் சொடுக்கச் சொன்னார் அன்பழகன். உலாவியிலேயே இந்தப் பயிற்சியை அவர் எனக்குத் தந்து கொண்டிருந்தார். key map Off என்று இருந்தது. உள்ளே....
tamil 99, phonetic, tamil Old typewriter, Bamani - வகை என நான்கு வகையான தட்டச்சுகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற தேர்வு இருந்தது. காட்டியை வலையில் நிறுத்தி, பழைய தட்டச்சு முறையைத் தேர்ந்தெடுத்தேன். தட்டச்சு செய்தால் தமிழில் யுனிகோடு எழுத்துருக்கள் திரையில் தெரிந்தன. மகிழ்ச்சிக் கூத்தாடினேன். அன்பழகன் அவர்களுக்கு என் நன்றியைக் கூறினேன்.
அடுத்த நாள் திருச்சியில் உள்ள கோவலன் என்ற நண்பருக்கு இந்த முறையைக் கூறினேன். அவரும் வியப்போடு வலையிறகித் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பினார். பெங்களூரில் உள்ள நண்பர் கேட்டார் அவருக்கும் இந்த முறையை அறிமுகப் படுத்தினேன்.
தமிழில் - யுனிகோடில் - எளிமையாகத் தட்டச்சு செய்ய - மிகக்குறைந்த அளவுள்ள - அத்தனை வகையான தட்டச்சு முறைகளையும் உள்ளடக்கிய - இந்த மென்பொருள் பற்றி பலருக்கும் தெரிந்தால் - அனைவரும் எழுதுவார்களே என்ற ஆசையில் இந்த இணையப் பக்கத்தை எழுதுகிறேன். மென்பொருள் உருவாக்கியவர் - New Horizon Media Private Limited, 33/15, Eldams Road, Alwarpet, Chennai 600018 - சென்னை முகவரியில் உள்ளார் - வலையிறக்கியதும் அவருக்கு நன்றி சொல்லுங்கள் -
இதே இணையதளத்தில் - யுனிகோடு எழுத்துரு மாற்றியும் உள்ளது. இதன் பயன்பாடு இதைவிட அதிகம். வியப்பூட்டுவது. தமிழுக்காக இயங்கிய இந்த நண்பரைத் தமிழம் வலை அன்போடு வாழ்த்துகிறது. இன்னும் நிறைய செய்ய அவர் திட்டமிடட்டும்.
NHM Software - இணையதளம் காண
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|