கணினித் தொழில் நுட்பத்தில் ஓர் வியத்தகு முயற்சி
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள் (7), குறள் உருவான கதை, நிலாச்சாரல் நிகழ்த்திய,
கலை கந்தசாமியுடனான நேர்முகத்தில்...
தமிழ் மொழிக்கேற்பச் சிறந்த செயலிகளை எளிய முறையில் பயன் படுத்தும் வண்ணம் வடிவமைப்பதே
கணித் தமிழாகும். உதாரணமாக ஒளி வழி எழுத்துணர்தல் (Optical Character Recognition) , உரு மாற்றிகள்
(Morphological Analyzer/Generator), உரை ஒலி (Text To Speech), ஒலி உரை (Voice To Text), தமிழ்த் தொழிலகச்
செயலிகள் (Tamil Enterprise Software) போன்ற தலைப்புக்களில் ஆராய்ச்சியை மேற்கொள்வதால் அல்லது இருப்பதை
எளிமையாக்குவதால் மட்டுமே கணித் தமிழ் முன்னேற்றம் அடையும். அப்போது தான் அதனைப் பயன் படுத்துவோர்களும்
அதிகரிப்பர்.
ஏனைய இந்திய மொழிகளை விடத் தமிழின் இணையப் பயன்பாடு மிகவும் முன்னேறிய இடத்தில் இருக்கின்றது என்பது
என் கருத்து. தமிழ் இணையத் தளங்களின் தோற்றம் அதன் கட்டமைப்பு, பொருளமைப்பு யாவும் உலகத் தரமானதாகவும்
இருப்பது தமிழின் வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும். இன்றைய முன்னணி நாளேடுகள், வார இதழ்கள், செய்திக் குழுக்கள்
யாவும் தமிழ் இணையத் தளங்களாக அவதாரம் எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கதே. அத்துடன் புத்தம் புதுத் தொழில்
நுட்டமான வலைப் பதிவுகள் (Blogs) மூலம் பதியப் பட்டபக்கங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
குறள் தமிழ்ச் செயலியின் மூலம் பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவதே என் கடமையாகும். அதன் படி,
தற்போது வெளியிட்ட குறள் 3.1 என்ற வெளியீட்டில் ஓசை - தமிழ் உரை ஒலி (Text to Speech) என்ற ஒரு வளர்ந்து
வரும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தேன். தமிழில் எழுதியதை அப்படியே வாசித்துக் காட்டும் இந்த அம்சம் பலரையும்
கவர்ந்ததிருக்கிறது. மழலைத் தமிழ் பேசும் இவ்வம்சத்தை இன்னும் செம்மையாக்கிக் கொண்டு இருக்கின்றேன். அது
போல இப்போதைய வெளியீட்டில் வழங்கப் பட்டிருக்கும் தமிழ்ச் சொற் பிழை திருத்தியின் தரத்தை மேலும் உயர்த்தும்
வகையில் வடிவமைத்துக் கொண்டுள்ளேன். குறள் தமிழ்ச் செயலியின் சமீப வெளியீட்டினை
KuralSoft.com என்ற இணையத் தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்து வரும் வெளியீட்டில் இது போன்று இன்னும் நிறையத் தொழில் நுட்பங்களையும் அறிமுகப் படுத்த உள்ளேன்.
கலை கந்தசாமி
ஓசை - தமிழ் உரை ஒலி
கலை கந்தசாமி புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். புதுவை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்ட
மேற்படிப்பு முடித்துவிட்டு கடந்த 14 வருடங்களாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவத்தில்
மென் பொருள் வல்லுனராக பணி புரிந்து வருகிறார். குறள் எனும் தமிழ்ச் செயலியை தனி ஒருவராக உருவாக்கி அதனை
இலவசமாக வழங்கிவருகிறார் கலை. நீங்களும் பெற
சொடுக்கவும்.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,