திரு - ஆதமி - Adamienv


http://www.nalinam.com
(for Dos & Win 3.1)
K.Srinivasan, 1109-P1 Gaboury, St.bruno, QC, J3V, 5X4 - CANADA.



வணங்குகிறேன் மேலே உள்ள முகவரி சரியா தவறா தெரியவில்லை. ஆனால் "திரு", "ஆதமி" எழுத்துருக்கள் இன்றும் என் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகின்றன. நான் 286 கணினி வைத்திருந்த பொழுது (1995), கணினியில் தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது, 8 X 8 புள்ளிகளுக்குள் தமிழ் எழுத்துருக்களை நான் Graphics இல் வடிவமைத்து அச்சாக்கி மகிழ்ந்த பொழுது, "...எனது 300 மணி நேர உழைப்பைப் பயன்படுத்தி இந்தத் "திரு" எழுத்துருக்களை உருவாக்கியிருக்கிறேன். தமிழ் இலக்கியத்தை, வரலாற்றை பதிவுசெய்ய விரும்புகிறவர்களுக்கு இதனை இலவசமாகவே அளிக்கிறேன்..." என்ற அறிவிப்புடன் எனக்குக் கிடைத்த முதல் தமிழ் எழுத்துரு "திரு" என்ற அழகிய தமிழ் எழுத்துருவே. இதனை 1.44 Floppy இல் பதிவுசெய்தது, கணினியில் தட்டச்சு செய்து, சிற்றிதழ்ச் செய்தி இதழை வடிவமைத்தது - இன்னும் நினைவிருக்கிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட "திரு" எழுத்துகளை ஆக்கியவர் திருமிகு K.Srinivasan என்று நினைக்கிறேன். (நான் தவறாகப் பதிவுசெய்தால் அருள்கூர்ந்து திருத்தவும். "திரு" எழுத்தை உருவாக்கியவர் என்னோடு தொடர்பு கொண்டால் மிகவும் மகிழ்வடைவேன்) கணினியும் தமிழும் என்ற இந்தப் பக்கத்தை நான் உருவாக்குவதற்குக் காரணம், இதுபோன்ற அரிய செயற்பாடுகள் "கணினி வரலாற்றில்" பதிவாக்கப்பட வேண்டும், நாலுகால் பாய்ச்சலில் மிக வேகமாக (ஓடிக்)மாறிக் கொண்டிருக்கிற கணினி உலகில் இவை மறக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதனைப் பதிவு செய்கிறேன் - பொள்ளாச்சி நசன் -


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,