அள்ளிக் கொட்டும் சிப்புகளும் அடிமையாகும் தமிழர்களும்
பொள்ளாச்சி நசன்.
அன்புடையீர், வணக்கம்.
ஒரு காலத்தில் வால்வுகள் ஆதிக்கம் செலுத்தின. 9, 12 என வெளிவரும் கம்பிகளுக்குள் வித்தைகள் புரிந்து புதியனவற்றை
சாதித்தனர் நம் தமிழர்கள்.
பிறகு டிரான்சிஸ்டர்கள் வந்தன. மூன்றே கம்பிகளுக்குள் அனைத்தும் அடங்கியது. (collector, base, emiter) மிகப் பெரிய
பெட்டிகளில் உள்ளவை கையடக்கப் பெட்டிகளுக்குள் அடங்கிப்போயின. வான்கம்பியின்றி நடந்துகொண்டே கேட்கவும்,
துல்லியமாகக் கேட்கவும் இந்தச் சின்னப் பெட்டிகள் துணைபுரிந்தன.
அடுத்து நுழைந்தது தான சிப் - கணக்கற்ற கம்பிகளுடன், மிகப் பெரிய மின்சுற்று இணைப்பையே தன்னுள் கொண்டு,
கையடக்கப் பெட்டிகளாக இருந்தவற்றை கைக்குள் அடங்கச் செய்த பெருமை இந்த சிப்புகளையே சாறும்.
இது வளர்ச்சியா ? அல்லது வீழ்ச்சியா??
வளருகிற தொழில் நுட்பத்தை தன்னுள் வாங்கி, அதற்கேற்றவாறு அறிவுப்புலத்தைப் பெருக்கிக் கொள்ளவது வளர்ச்சி.
வளருகிற தொழில் நுட்பத்தை பயனாளியாக வாங்கி அடுக்கி தொழில்நுட்பம் அறியாது வாழ்வது வீழ்ச்சி.
இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம்?
தொழில் நுட்பக் கண்டுபிடிப்பால் ஏகப்பட்ட கருவிகள். கணினி, செல்பேசி, படக்கருவி, வீட்டுப்பொருள்கள், விளையாட்டுப்
பொருள்கள் எனப் புதிய புதிய பொருள்களுக்குள் மூழ்கிப் போகிறோம். திறந்துவிடப்பட்ட இந்தியாவிற்குள் நிறைய
பொருள்கள் குவிகின்றன. குறைந்த விலையில். பயன்படுத்தித் தூக்கி எறியும் தன்மையில்.
அன்று...
நம்மிடம் உள்ள வானொலி பழுதானால், சரிசெய்ய நிறைய பேர் இருந்தனர். பழுதாய்ப் போன டிரான்சிஸ்டரையோ,
கன்டென்சரையோ, ரெசிஸ்டன்சையோ - கண்டறிந்து புதியன பொருத்தி - பத்து இருபது ரூபாய்க்குள், பழுதானவை பாடின,
இன்று ...
அந்த பேர்டில் உள்ள ஒரு சிப் பழுதாகிவிட்டது என்றால் அந்த போர்டையே மாற்ற வேண்டும். Use and throw அந்த போர்டில்
உள்ள மற்ற பொருள்கள் பற்றிக் கவலையில்லை. பணம் கொடுத்தால் உடனே போர்டையே மாற்றிவிடலாம். சிப் மட்டும் மாற்ற
வேண்டும் என்றால் கம்பெனிக்குத்தான அனுப்ப வேண்டும்? அது வந்தாலும் வரலாம்.
அதுவும் இன்றைய வளர்ந்து வரும் கணினித் தொழில் நுட்பத்தில் அப்படியே மாற்றவேண்டும். பிடுங்கி எறியும் போர்டுகளும்,
உதிரிகளும் குப்பைகளாகக் குவிகின்றன. ஆடும் வரை ஆட்டம் ஆடிமுடிந்தால் தூக்கி எறிந்து விடவேண்டும்.
வேலையில்லை வேலையில்லை என்று கூக்குரலிடும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம். வெளிநாட்டுப் பொருள்களை வாங்கிக்
குவித்து குப்பையாக அடுக்கும் கூட்டம் மறுபக்கம்.
இங்கே...
கல்வியில் என்ன சொல்லித் தரப்படுகிறது? தொழில் நுட்பம் இல்லை. வெளிநாட்டில் போய் அடிவருடி வேலை செய்ய பணம்
கோடிகோடியாய்ப் பெற வழி காட்டப்படுகிறது. அதுவும் பல லட்சங்கள் இருந்தால்தான இங்கே படித்து மேலெழ முடியும்.
அண்ணா பல்கலைக் கழகம் இது பற்றிச் சிந்திக் வேண்டும். அடிப்படைத் தொழில் நுட்பத்தை கற்றுத் தருகிற படிப்பை
முன்னெடுக்க வேண்டும். படித்துவிட்டு இங்கேயே சிப்களை உருவாக்குகிற தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும்.
நமக்குத் தேவையானவற்றை யெல்லாம் நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். உயர் தொழில் நுட்பத்தை கற்றுத் தராது,
அடிப்படை அறிவை - உருவாக்குகிற ஆற்றறை நம் இளைஞர்களிடம் வளர்த்தெடுக்காது - இந்தப் படிப்பு கூட மதிப்பெண்
அதிகம் பெற்றவர்களுக்கே என்று புதியன ஆக்கும் திறனற்ற மனப்பாடத்திறன் மட்டுமே உள்ள மாணவர்களுக்கே அளிக்கும் போது
எங்கே புதியன கண்டறிய முடியும்?
எனது நண்பன் மேல் நிலைக் கல்வி படித்தவன்தான். கைகளால் தடவியே எந்த
கண்டென்சர் போய்விட்டது எனக் காட்டி, ரேடியோவை பாடவைத்து விடுவான். இது போன்ற ஆற்றலுள்ளவர்களை
கண்டறிந்து ஆய்வு மனப்பான்மையோடு - புதிய தொழில் நுட்ப நுணுக்கங்களைக் கண்டறிய வாய்ப்புத் தந்தால் தமிழகம்
தலைநிமிாந்து நிற்கும். இங்கே ஆற்றலுள்ள இளைஞாகள் இருக்கிறார்கள். அவர்கள் சோற்றுப்பாட்டுக்கே
உழலுகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றலுள்ள துணைவேந்தர் இது பற்றி சிந்தித்து வருடம் ஒன்றுக்கு ஒரு பத்து
ஆற்றலுள்ளவர்களைக் கண்டறிந்து வளர்த்தெடுத்து அவர்களை ஆய்வு நோக்கில் வளர்த்தெடுத்தால் - அகில உலகமே நம்
துணைநாடி நிற்கும்.
நம் காலத்தில் நாமாவது சரியாகச் சிந்தித்துப் பாதை அமைப்போம்.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|