இப்படி இருந்தால் எப்படி இருக்கும் ?


தொல்காப்பியம் முற்றோதல்

இரண்டு நாள்களுக்கு முன்பு திருமிகு செம்பியன் அவர்கள் தொல்காப்பியம் முற்றோதல் என்ற குறுவட்டினை அனுப்பியிருந்தார். இக்குறுவட்டுகள் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் மைசூர் கிளை வெளியிட்டிருந்தது.

தொல்காப்பியம் முற்றோதல் என்கிற இந்தத் தொகுப்பில் 5 குறுவட்டுகள் உள்ளன. தொல்காப்பியம் முழுமையும் (நூன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல் என்கிற அனைத்தும்) முற்றோதல் வடிவில் மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

முனைவர் இரா. திருமுருகன், பேரா,மா,வயித்தியலிங்கன், பேரா.எசு.ஏ.கே.துர்கா, பேரா,பிரமிளா குருமூர்த்தி, போரா.த.கனகசபை, முனைவர் மார்கரெட் பாசுடின்., முனைவர் அரிமளம் க.பத்மநாபன் - ஆகியோர் இந்தக் குறுவட்டுகளில் பங்களிப்பு செய்துள்ளனர். முனைவர் இரா. திருமுருகன் முன்னுரை தந்துள்ளார். பேரா.மா.வயித்தியலிங்கன் சிறப்புப் பாயிரத்தைப் பாடியுள்ளார்.

இந்தக் குறுவட்டினைக் கேட்கும் பொழுது நிறைவாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. இதன் தொடர்பாளரகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்தக் குறுவட்டினை நான் கேட்ட பொழுது - கண்ணை மூடிக் கொண்டு கேட்கத் தொடங்கினேன். மாணவர்களுக்கு இந்தக் குறுவட்டு எந்தவகையில் பயனாகும் என்று சிந்தித்தேன். கேட்பதனால் மட்டும் இது ஆழமாகப் பதிந்து விடாது. எனவே பாடல் பாடப்பாட - அதற்கான வரிவடிவமும் காட்சிப் பொருளாக இருந்தால் - இரண்டு புலன்களின் வழியாகக் கருத்து உள்நுழைவதால், ஆழமாக உள்பதியும் என்று எண்ணிணேன். அதன் விளைவாக இங்குள்ள இயங்கு வடிவத்தை உருவாக்கியுள்ளேன், இதனைப் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கிறேன். தொல்காப்பியம் முழுமையும் - அல்லது மாணவர்களுக்குப் பாடமாக இருக்கிற பகுதி மட்டுமாவது இப்படி இருந்தால் எப்படி யிருக்கும் என்று சிந்திக்கிறேன். உங்களின் ஊக்குவிப்பில்தான் அடுத்தவை தொடரும் - அன்புடன் தமிழ்க்கனல் - பொள்ளாச்சி - தமிழம் வலை,





தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,