இலக்கியத் தொகுப்பு - இறுவட்டு
குவைத். ( TEF - KUWAIT ) தமிழ்நாடு பொறியாளர் குழுமம்,
தமிழகத்திலிருந்து துபாய் சென்று பொறியாளராக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுமத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த நண்பர்கள் குழு தங்களது திறன் வளர்ச்சிக்காக பொறியியல் தொழில் நுட்பப் பகிர்வினை குறுவட்டுகளாக்கிப் பகிர்ந்து கொள்வது - தொழில் நுட்பக் கூறுகளைப் பயன்படுத்தி வளர்ச்சி காட்டுவது என்பது வணங்குதற்குரிய செயல். இந்தக் குழுமம் தொழில் நுட்பக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் - தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழிக்காகவும் - குறுவட்டுகளை உருவாக்கி, குறுவட்டுகளோடு இணைத்துச் சுற்றுக்கு விடுவது என்பது கடல் கடந்து வாழுகிற இத்தமிழர்களின் தணியாத தமிழ்த் தேடலைக் காட்டுகிறது. தமிழம் வலை இந்தக் குழுமத்தையும், இதில் இணைந்துள்ள நண்பர்களையும் வாழ்த்துகிறது.
இந்த ஆண்டு இக்குழுமம் ஆறு குறுவட்டுகளை வெளியிட்டுள்ளது. முதல் குறுவட்டில் வேதிப் பொறியியல் தொடர்பான தொழில் நுட்பச் செய்திகளையும், இரண்டாவது குறுவட்டில் கட்டடக்கலை, மின்னியல் மற்றும் மின்அணுவியல், தகவல் தொழில் நுட்பம், மற்றும் பாதுகாப்பு ஆகிய ஐந்து தலைப்புகளில் கருத்துகளையும், மூன்றாவது குறுவட்டில் கருவியாக்கம், இயந்திரப் பொறியியல், ஆய்வுக் குறிப்புகள் போன்றவைகளும், நான்காவது குறுவட்டில் மேலாண்மை, தீ தடுப்பு, சுற்றுச் சூழல் போன்ற செய்திகளையும் - வெளியிட்டுள்ளது.
இவை மட்டுமல்லாது இரண்டு குறுவட்டுகளை இணைத்துள்ளது. முதல் குறுவட்டில் தமிழ் கற்க, அரிச்சுவடி, பிற இலக்கியங்கள் என்ற தலைப்பில் செய்திகளை இணைத்துள்ளது. பிற இலக்கியங்கள் என்ற தலைப்பில் சிறுவர் இலக்கியம், சங்க இலக்கியம், காப்பியங்கள் என்று இலக்கியப் பக்கங்களை இணைத்துள்ளது. தமிழம் வலையில் உள்ள சில பகுதிகள் இந்த இணைப்பில் உள்ளது கண்டு மகிழ்ந்தேன். மேலும்...
தமிழம் வலையில் உள்ள, - தமிழமுது - குறுவட்டினை தமிழ் கற்க என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
ஆறாவது குறுவட்டில் 2006 முகவரிப் பட்டியல் என தொழில் நுட்ப வல்லுநர்களின் புகைப்படம், முகவரி, திறன் பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
இக்குழுமத்தின் அடிப்படை நோக்கமாக - தொழில் நுட்பச் சந்திப்புகள், சொற்பொழிவுகள் வழி இதன் உறுப்பினர்களுக்கு - அறிவு மற்றும் கல்வியில் வளம் பெற களம் அமைத்துத் தருகிறது. மேலும் வேலையற்ற பொறியாளர்களுக்கும், குவைத் வரும் இளம் பொறியாளர்களுக்கும் வேலைவாய்ப்பிற்கு வழி காட்டுகிறது. உறுப்பினர்களின் கல்வி மேம்பாட்டிற்கு மட்டுமல்லாது கலை பண்பாட்டிற்குமான செயற்பாடுகளையும் இக்குழுமம் திறம்படச் செய்து வருகிறது. இதன் செயற்பாடுகள் செழித்து வளர வாழ்த்துகிறோம்.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|