கலைப்பூக்கள் - இறுவட்டு


Softview - Visual Communication படிக்கும் மாணவர்களது கற்றல் வெளிப்பாடு
Softview, Nelson Manickam Road, CHENNAI - 29



குறும்படங்களில் பல வகை உண்டு. Softview உருவாக்கியுள்ள இந்தக் குறும்படம் உண்மைநிலையைக் கலைத் தன்மையோடு எடுத்துக்காட்டுகிற விளக்கப்படம். கழைக்கூத்தாடிகள் என வேறு மாநிலமான குஜராத்திலிருந்து இங்கு வந்து ஆடிப்பாடி மக்களை மகிழ்வித்து, தங்களது வாழ்க்கையை ஓட்டுகிற ஒரு மக்கள் கூட்டத்தினுடைய வாழ்முறையை, நிகழ்வுகளை, பிரச்சனைகளை, நிலைகளை எடுத்துக்காட்டுகிற வகையில் உருவாக்கப்பட்ட குறும்படம் இது. Softview - Visual Communication படிக்கும் மாணவர்களது கற்றல் வெளிப்பாட்டு முயற்சியாக இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கம்பிமேல் நடந்தும், நெருப்பு வளையத்திற்குள் புகுந்தும், நீண்ட குச்சியின் முனையில் பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் காட்டியும், மக்கள் மத்தியில் ஆடிப்பாடி மகிழ்வித்தும் - வாழுகிற இவர்களது வாழ்முறையை இயல்பாகப் படமாக்கியுள்ளனர். சாதிகள் இல்லையடிப் பாப்பா என்று இவர்கள் வாழ நினைத்தாலும் இந்த மக்களாட்சிக் கட்டமைப்பிற்குள் சாதிக்குள்தான் கல்வியையும் முடக்கி வைத்துள்ளார்கள் என்ற உண்மையை இயல்பாக இக்குறும்படம் எடுத்துக் காட்டுவது நுட்பமானது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,