திருவாசகம் - இறுவட்டு


காலம் கடந்து நிற்குமா ?


இளையராசாவின் மற்றுமொரு மணிமகுடம் என்று போற்றப்பட்ட குறுவட்டு வெளியீடு பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அனைத்து வணிக இதழ்களும், நாளிதழ்களும் இது பற்றி எழுதியிருந்தன. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் - என்ற கூற்று அடிக்கடி நெஞ்சில் நிழலாடியது.

SS-Music தொலைகாட்சிகூட நிகழ்வினை ஒளிபரப்பியது. ஒரு பாடலுக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இசைக்கப்பட்ட பாடல் கேட்டபொழுது, இது மேலைநாட்டு இசையா ? தமிழிசையா ? என்ற வினாக்குறி யெழுந்தது. இடையிடையே ஆங்கிலச் சொற்களின் அதிர்வும், அச்சுறுத்தியது. மேடையில் அமர்ந்திருந்த நடிகர்களான ரஜினி, கமல் ரசிப்பதாக கையை ஆட்டினர். பாரதிராஜா மட்டும் வினாக்குறியோடு அமர்ந்திருந்ததை அவரது முகம் காட்டியது.

இது பற்றிப் புலவர் மருதமுத்துவிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஓதுவார் அமைப்பு வெளியிட்ட ஒலிநாடாவினை இயக்கிக் காட்டினார். திருவாசகப் பாடல்களை இசைக்கருவிகள் இல்லாமலும், எளிய இசைக்கருவிகளுடனும் பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் கண்களை மூடியபடி, கேட்கத் தூண்டியது. உள்ளத்தை உருக்கியது. தமிழிசை இதுதான் என்ற நுட்பத்தைக் காட்டியது. ஆடம்பரத்திலும், ஆரவாரத்திலும் ஆக்கப்படுபவை அனைத்தும் ஆக்குபவர்கள் உள்ளவரை வாழுவதுபோலத் தோற்றம்தரும். உண்மைத் தன்மையோடு, தமிழிய வரலாற்றை மீட்டெடுக்கிறோம் என்கிற தன்மையோடு படைக்கப்படுபவை காலம் கடந்து நிற்கும் பேசப்படும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,