கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 87

மூளைச் செறிவிற்கான வரைதல் பயிற்சி





புள்ளிகளை இணைத்து இடவலமாற்றமாகப் படங்களை வரைதல்

மேலே உள்ள படத்தின் வலது பக்கத்தில் இரண்டு மீன்களின் படங்கள் புள்ளிகளை இணைத்து வரைந்து காட்டப்பட்டுள்ளன. இடது பக்கத்தல் புள்ளிகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன.

பொதுவாக மாணவர்கள் படத்தில் உள்ளவற்றை அப்படியே பார்த்து வரையும் தன்மையை பெற்றிருப்பார்கள். புள்ளிகளை எண்ணி அதில் உள்ளது போலவே வரைந்து விடுவார்கள். இது எளிமையான வரைதல் பயிற்சி. இந்தப்படங்கள் நேர்கோட்டினை உடையதாக இருப்பதால் மாணவர்களுக்கு இந்த வகையான வரைதல் எளிமையாக இருக்கும்.

ஆனால் மாணவர்களுக்கு வேறுவிதமான பயிற்சியானது இந்தப் படத்தைக் கொண்டு இங்கே அறிமுகப்படுத்தப் படுகிறது. mirror image என்கிற குறைபாடு உடைய மாணவர்கள் 3, 7, 6, 9 ஆகிய எண்களை திருப்பி எழுதுவார்கள். ஒருசில எழுத்துகளையும் இந்த வகையிலேயே இடவலமாற்றமாகத் திருப்பி எழுதுவார்கள்.

மேலே உள்ள படத்தைப் பார்த்து அதே போல புள்ளிகளை எண்ணி மாணவர்கள் இந்தப் படத்தை இடவல மாற்றமாக வரைய வேண்டும். இது தான் இங்கு நாம் அறிமுகப்படுத்துகிற பயிற்சி.

படத்தை இடவலமாகத் திருப்பி வரைய மாணவர்களுக்குக் கூடுதலான கவனமும், மூளைச் செறிவும் தேவை, இந்தப் பயிற்சி மாணவர்களுக்கு மூளைச் செறிவை ஏற்படுத்தும். பொருளின் மறு தோற்றத்தைக் கற்பனை செய்யவும், வடிவமைக்கவும் வழி செய்யும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278