கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 85

படத்தின் கண்ணும் மூக்கும் வாயும் விரும்புகிற வகையில் மாறும்


இந்த முறை கல்வி ஆராய்ச்சி பகுதிக்காக வலையேற்ற வேண்டுமே என்று தேடிக் கொண்டிருந்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. கிடைத்ததும் தரமாக இல்லை. பழைய செய்திகளையே திருப்பிக் காட்டவும் மனது இல்லை.

என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருந்த போது, அரபு நாடுகளிலிருந்து ஒளிபரப்பப்படுகிற தொலைக்காட்சி ஒன்றினைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இளம் மாணவர்களுக்கான வரைதல் திறனை வளர்த்துவதற்கு IRIB TV 3 Channel வழியாக - செய்து காட்டியது - சிறப்பாக இருந்தது. அதனை அப்படியே இங்கு தருகிறேன்.

தலைப்பகுதி மட்டுமே வரைந்த ஒரு படத்தின் கண், மூக்கு, வாய் ஆகிய மூன்றினையும் விரும்புகிறவாறு மாற்றி - மாணவர்களின் வரைதல் திறனுக்கு அடித்தளம் அமைக்கலாம்.

முதல் படத்தில் தலையின் வெளிப்பகுதி மட்டும் வரைந்த - முடி, காது, முகம், கழுத்து ஆகியவற்றை வரைந்த - இரண்டாக மடிக்கப்பட்ட அட்டையானது எடுக்கப்பட்டது.

பிறகு மடித்த பகுதிக்கு உள்ளே - வட்ட வடிவமான 3 தட்டுகள் 3 அங்குலம். 2 1/2 அங்குலம் 2 அங்குலம் அளவுள்ள தட்டுகளானது ஒன்றன் மேல் ஒன்றாகப் பொருந்திச் சுழலுமாறு வைக்கப்பட்டது.

இரண்டாவது படத்தில் முகமும், அதன் ஓரங்கள் அலங்கரிக்கப்பட்டும் இருப்பதைக் காணலாம், கண், மூக்கு, வாய் எந்தப் பகுதியில் இருக்கும் என்பதையும் குறித்துள்ளதைக் காணலாம்.

மூன்றாவது படம் - 3 அங்குல விட்டமுள்ள வட்டமான அட்டை - முதலில் வைத்த அட்டையில் வரைந்துள்ள வெவ்வேறு வகையான கண்களைக் காட்டும். ஓரத்தில் சுழற்றும் பொழுது ஒவ்வொரு சோடி கண்ணும் முகத்தில் வரும்.

இதுபோலவே அடுத்த 2 1/2 அங்குல விட்டமுள்ள வட்டமான அட்டையில் மூக்கு வரையப்பட்டு பெரிய வட்டத்திற்கு மேலே வைக்கப்படும்

அடுத்ததாக 2 அங்குல விட்டமுள்ள வட்டமான அட்டையில் பல்வேறு வகையான வாய்கள் வரையப்பட்டு இரண்டாவது வட்டத்திற்கு மேலே வைக்கப்படும்

பிறகு கழுத்துக்குக் கீழே உள்ள ஒட்டையின் வழியாக நுழைக்கப்படுகிற ஒருஆணி இந்தமூன்று வட்டங்களையும் மடிக்கப்பட்ட அட்டையின் உள்ளே சரியாகச் சுழலுமாறு பொருத்தப்படும்.

இப்பொழுது கருவி தயாராகி விட்டது.

கண் என்ற பகுதியை சுழற்ற வேறு வேறு கண்கள் முகத்தில் தோன்றும்.
மூக்கு என்ற பகுதியில் உள்ள வட்டத்தை சுழற்ற வேறு வேறு மூக்கு தோன்றும்
வாய் என்ற பகுதியில் உள்ள வட்டத்தை சுழற்ற வாய் வேறுபடும்.


மாணவர்களின் விருப்பத்திற்குத் தகுந்தவாறு அவர்களே முகத்தை உருவாக்கச் சொன்னால் மகிழ்வோடு உருவாக்குவார்கள்.

மாணவர்களது வரைதல் திறனை இது வளர்த்தும்



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278