கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 84

ஊசி, நூல் - தையல் வேலைப்பாடுகள்


ஊசியையும் உல்லன் நூலையும் பயன்படுத்தி அழகிய வடிவங்களை துணியில் உருவாக்க முடியும்.

இந்த வடிவங்களை உடைகளில் உருவாக்கினால், பார்ப்பவர்களை வியப்படைய வைக்கும்.

படத்தில் நான்கு வகையான தையல் வேலைப்பாடுகள் காட்டப்பட்டுள்ளன. இந்த அடிப்படையான தையல் வகைகளை வைத்துக் கொண்டு வேறு வேறு வகையான வடிவங்களை உருவாக்கவும். ஊசியைத் துணியில் நுழைத்து நூல் முடிச்சுகளை உருவாக்கவும். உருவாக்கிய நூல் முடிச்சுகளை துணியோடு இணைத்துப் பொருத்தவும். வண்ண நூல்களைப் பயன்படுத்தி வடிவத்தை ஈர்ப்புடையதாக வடிவமைக்கவும்.

நூல்கள் தடிமனாக மேலெழுந்து நின்று, வடிவத்தைக் காட்டும் பொழுது அதன் ஈர்ப்பு கூடுதலாக இருக்கும். படைப்பாளியின் கற்பனைத் திறனுக்கும், கை வேலைப் பாட்டிற்கும் ஏற்றவாறு வடிவங்கள் வெவ்வேறு தரத்ததாக அமையும்.

மாணவர்களுக்கு இவ்வகையிலான எளிய கை வேலைப் பின்னல்களை அறிமுகப்படுத்த, அது அவர்களது பொழுது போக்காக அமைவதோடு, புதியன உருவாக்கும் ஆற்றலையும் வளர்த்தெடுக்கும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278