கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 82

குழந்தைகளுக்காக ஓரத்தை அலங்கரிக்கும் பயிற்சி

பாடத்தைப் படித்து மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது. எழுதிக்காட்டுவது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது என்பதோடு கல்வி நின்றுவிடவில்லை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதுதான் கல்வி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பயிற்றுவிக்கும் மாணவர்கள் ஆக்கத் திறன் இழந்து வெறுமையை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருப்பார்கள். புதியன கண்டறிதலோ. கூர்த்த அறிவு பெற்று நுணுகிக் காணுதலோ கிட்டாது. பெற்றோர்கள் இதனை உணர வேண்டும்.

படிக்கும் மாணவர்களிடம் ஆக்கத்திறனும், புதிய கண்டறியும் வேகமும் இருத்தல் வேண்டும். இதற்கு அடிப்படையாக இருப்பவை கை வேலைத்திறனும், கலை நுணுக்கமாக காணுகிற பாங்கும்.

இந்தச் செய்தியை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது தற்பொழுது குறைந்து கொண்டே வருகிறது. 1926 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் வெளிவந்த THE SCHOOL MISTRESS என்ற திங்களிதழில் இந்தக் குறிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.




மேலே தரப்பட்டுள்ள படத்தில் காணப்படுகிற ஒவ்வொன்றையும் மாணவர்களாகவே வரைந்து பழக வாய்ப்புத் தரவும். வட்டம், நேர்கோடு, புள்ளி, வளை கோடு - என்கிற அடிப்படைகளை இணைத்து உருவாக்குகிற வரைதல் இது. அட்டையின் ஒரங்களில் இவ்வகையாக வரைந்து அழகுபடுத்த இதனைப் பயன்படுத்தலாம். அட்டையின் ஓரத்தை இந்த வகையில் அழகுபடுத்துப் பொழுது அட்டை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

மாணவர்களை இயல்பாகச் சிந்திக்க வைத்து, எப்படி ஓரத்தை அழகு படுத்துவது எனத் திட்டமிட வைத்து, வரைய ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு வட்டம், நேர்கோடு, புள்ளி, வளை கோடு - என்பனவற்றை இணைத்து உருவாக்கி வரைய ஊக்குவிக்க வேண்டும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278