கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 80

தமிழில் படித்தல் திறன் வளர

வரிசை எண் 79 இல் படித்தல் திறன் வளர 32 அட்டைகளைப் பார்த்தோம்.

வரிசை எண் 80 இல் அந்த அட்டையின் வழி மாணவர்கள் அடுக்கிப் பழகிட, எழுத்துகளை உணர்ந்திட, எழுத்துகளை உள்வாங்க உதவுகிற - ஞெகிழி எழுத்துகள் பற்றிய குறிப்பினை இப்பொழுது பார்க்கலாம்.

இந்த எழுத்துருக்களில், உயிரெழுத்துகள் 12, மற்றும் க முதல் ன வரையிலான 18 எழுத்துகள் (இரண்டு எழுத்து என 36 எழுத்துகள்), உ ஊ வரிசையில் அதிகம் பயனாகுகிற எழுத்துகள், குறியீடுகளில் இரண்டு எண்ணிக்கை என - 75 எழுத்துருக்களை ஒரு பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்கிறார்கள்.

தமிழ் கற்றுக் கொள்ளும் மாணவர்கள், எழுத்துகளை எழுதிப் பழகுவது, சொல்லிப் பழகுவது என்பதோடு - இந்த எழுத்துருக்களை அடையாளம் கண்டு பெட்டியிலிருந்து எடுத்து - அவைகளை சொல்லுக்குத் தகுந்தவாறு அடுக்கிப் பழகினால் - எழுத்துகள் மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியும்.

உயிர் மெய் எழுத்துகளை உருவாக்க கொடுக்கப்பட்டுள்ள - க முதல் ன வரையுள்ள - எழுத்துகளின் மீது குறியீடுகளை பொருத்துவதுன்வழி - ஒலிப்பு முறையையும், எழுத்து வடிவத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

குறியீடுகளை நிலையாக வைத்து எழுத்துகளை மாற்றுவதன் மூலம் உருவாகுகிற புதிய எழுத்துகளை உள்வாங்கி, அதன் ஒலிப்பு முறையையும் சரியாக ஒலிக்கப் பயிற்றுவிக்க வேண்டும். இப்பொழுது மாணவர்கள் எழுத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

மாணவர்கள் தாங்களாகவே, கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளை எழுத்துகளின் மீது பொருத்தி - உருவாகுகிற புதிய எழுத்துகளைக் கண்டறிவதோடு மட்டுமல்லாது - ஒலிப்பு முறையையும் அறிந்து கொள்ள வேண்டும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278