கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 74

நாள்காட்டியும் பாடபுத்தகமாகும்.


சிவகாசியிலிருந்து - மினின் தமிழர் நாள்காட்டி - வந்திருந்தது. திருவள்ளுவராண்டு 2039 சுறவம் (தை) முதல் நாளில் தமிழத்தாய் படத்தினையும், இரண்டாம் நாளில் திருவள்ளுவரையும், தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒரு தமிழ் அறிஞரது புகைப் படத்தையும், தாளின் பின் பகுதியில் அவர் பற்றிய குறிப்பும் வெளியிட்டு - தமிழ்ச் சான்றோர்களுக்கான பதிவாணமாக இந்த நாள்காட்டி அமைந்திருந்தது.

இந்த நாள்காட்டியிலுள்ள ஒவ்வொரு தமிழறிஞரையும் தொடக்கப் பள்ளியில் ஒவ்வொரு நாளும் அறிமுகப் படுத்தினால் - கேட்கிற குழந்தை தமிழ் உணர்வாளனாக வளர்த்தெடுக்கப் படுவான். இதிலுள்ள 100 தமிழறிஞர்களை தேர்ந்தெடுத்து - ஒவ்வொரு நாளும் - காலையில் நடைபெறும் நாளவைக்குப் பின் அறிமுகப் படுத்துவதோடு - அறிவிப்புப் பலகையில் அந்த அறிஞரின் பெயரை எழுதி வைத்தால் பயன் மிகும்.

கிடைக்கிற தரமானவற்றையெல்லாம் மாணவர்களின் நிலை உயர்த்துகிற அடித்தளமாகக் கல்விக் கூடங்கள் பயன்படுத்தும் பொழுதுதான் மாணவர்கள் பல்முனை அணுகுதல்களோடு வெற்றி பெறுவார்கள்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278