கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 65

அட்டையில் பொருள்களைச் செய்து அழகுபடுத்துதல்

படத்தில் பெட்டி, தட்டு போன்ற பொருள்களின் அருகே அந்தப் பொருள்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான அடிப்படையானது வரையப்பட்டுள்ளன.

பொருள்களின் அருகருகே காட்டியுள்ளபடி அட்டையில் படம் வரைந்து வெட்டி மடக்கினால் படத்தில் காணுகிற பொருள்கள் கிடைக்கும். ஓரங்களில் ஒட்டுத்தாளைப் பயன்படுத்தி மடக்கியுள்ள பகுதிகளை ஒட்டி பொருள்கள் உருவாக்கவும்.

உருவாக்கிய பொருள்களின் மேல்பகுதியில் வண்ணங்கள் தீட்டி மகிழலாம். அல்லது கலை நுட்பத்தோடு இவை அமைய வேண்டும் என்றால் பொருள்களின் ஓரப்பகுதியிலும், நடுவிலும் வெவ்வேறு வகையான விரும்புகிற படங்களை வரைந்து அழகு படுத்தலாம்.

படத்தின் மேல் பகுதியில் மாணவர்களுக்குப் பயனாகுகிற வகையில் ஓரத்திலும், நடுவிலும் வரைவதற்கான படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் முடிந்த முடிவல்ல. இவை ஒரு தொடக்கமே. மாணவர்கள் இந்தப் படங்களை முதன்மையானதாக வைத்துக் கொண்டு, அவர்களது விருப்பத்திற்கும், கற்பனைக்கும் ஏற்றவாறு வெவ்வேறு படங்களை வரைந்து பயிற்சி எடுத்துக் கொள்ளவும். பிறகு....

அட்டையில் உருவாக்கிய பொருள்களின் மீது நேரடியாக அழகூட்டும் படங்களை வரைந்தோ, அல்லது அடித்தளமாக வண்ணங்களை பூசிவிட்டு அதன்மீது அந்த வண்ணத்திற்குப் பொருத்தமாக உள்ள வேறு வேறு வண்ணங்களில் அழகூட்டும் படங்களை வரைந்தோ இவற்றை உருவாக்கலாம்.

இந்தச் செயற்பாடு மாணவர்களது கற்பனைத் திறனுக்கும், அழகுணர்ச்சிக்கும் அடித்தளம் அமைப்பதாக இருக்கும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278