கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 61

பறந்து சென்ற குருவிக்கு வீட்டிற்கு வழி காட்டவும்,
கரிக்கோலால் கோடுவரைந்து வழி காட்டவும்.



மழலையர்களுக்குத் தேடிக் கண்டுபிடித்தல் என்பது மகிழ்வாக இருக்கும். பாதையைக் குருவியின் காலுக்குக் கீழ் அம்புக் குறியிட்டுக் காட்டப் பட்ட பகுதியிலிருந்து தொடங்க வேண்டும். கரிக்கோலால் கோடு போட்டுக் கொண்டே வர வேண்டும்,

பாதை அடைபட்டால் மீண்டும் வந்த பாதையிலேயே வந்து திறந்துள்ள பாதை வழியாகச் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை பாதை அடைபடும் பொழுதும் மாணவர்களது ஏக்கமும், முனைந்து தேடவேண்டும் என்ற உந்துதலும் கூடும்,

தோல்வியடையும் பொழுதெல்லாம் சோர்ந்து போய் விடாது, மீண்டும் மீண்டும் முயலவேண்டும் என்கிற - படிப்பினையும் - அதற்கான மனவலிமையையும் இந்தச் செயற்பாடு கூட்டும்,

குறிப்பிட்ட மணித்துளிகளுக்குள் இறுதி இலக்கை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து - பாதையை தேடத் தொடங்கினால் - அதனையே பயிற்சியாக அமைத்துத் தொடர்ந்து இயங்கினால் - மாணவர்களது விரைவாகவும். சரியாகவும் முடிவெடுக்கும் தன்மையானது வளர்த்தப்படும்,

இது போல வெவ்வேறு வகையான பாதை காணும் பயிற்சிகளை வடிவமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி தர மாணவர்களது - முடிவெடுக்கும் திறனானது - கூர்மை படுத்தப்படும்



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278