கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 58

நேர்கோடு, வளைகோட்டில் படங்கள் வரைய...

வரைதலுக்கான அடிப்படை நேர்கோடுகளும் வரைகோடுகளும் தான். மிக நுட்பமாக வரையப் பயிற்சியைப் பெற்ற மாணவர், அனைத்துப் படங்களையும் உயிரோட்டத்துடன் வரைய முடியும்.

நேர்கோடுகளை மிகச் சரியாகவும், விரும்புகிற கோணத்தில் சாய்த்தும், விரும்புகிற அளவுடையதாக நீட்டியும் வரைவதற்குரிய நுட்பத்தை ஒருவர் கைக்கொள்ள வேண்டியது அடிப்படையாகும். இந்த அடிப்படைச் செயற்பாடுகளை பயிற்சி செய்யும் வகையில் கீழேயுள்ள படமானது கொடுக்கப்பட்டுள்ளது. படங்களைப் பார்த்துத் தாளிலும், கரும்பலகையிலும் வரைந்து பழக, கைப்பழக்கம் ஏற்படும். வரைந்து பழகவும்



இவ்வாறாகவே கீழுள்ள வளைகோட்டுப் படங்களையும் வரைந்து பழகவும். வட்டத்தினுள் வலைகோடுகளை, இயல்பாக, ஒரே அளவுடையதாக, வரைந்து பழகவும். வரைந்த கோடுகளுக்கிடையில் வெள்ளை வண்ணத்தை இட்டு நிரப்பியோ, அல்லது நிழலிட்டு நிரப்பியோ, வெவ்வேறு வகையான வரைபடங்களை உருவாக்கவும்.




மேலும் விரும்பினால் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தியும் இடைவெளிகளை நிரப்பினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்து அழகுகாட்டும். இவ்வகையான செயற்பாடு மாணவர்களது தனித்திறமையை ஊக்குவிப்பதாகவும் அமையும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278