கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 57

களிமண்ணால் உருவங்கள் செய்யலாமே.

மாணவர்கள் தான் காணுகிற பொருள்களை களிமண்ணால் உருவங்கள் செய்து பார்க்கும் பொழுது, அவர்களது கற்பனைத் திறன் கூடுகிறது. தான் உருவாக்கிய பொருள்களைக் காணும் பொழுது மகிழ்வு மேலிடுகிறது. ஒரு புதிய பொருள் ஆக்குநராக நெஞ்சு நிமிர்கிறது.

மாணவர்கள் உருவங்கள் செய்வதற்கான படங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இவை யாவும் ஒரு வழிகாட்டியே. மாணவர்கள் இயல்பாகத் தாங்களே கற்பனையாகச் செய்ய ஊக்குவித்தோமானால் அதுவே மிகச் சிறந்ததாக அமையும். படங்களைப் பார்த்துச் செய்வது என்பது அவர்கள் பழகுவதற்கான படிநிலையாக இருந்து, தொடர்ச்சியான அவர்களது கைவேலைகள், அவர்களது உள்ளார்ந்த ஆற்றலை வளர்த்தெடுக்குமானால் அதுவே சிறப்பானதாக இருக்கும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278