கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 54

ஆடும் பொம்மை ஆக்குவது எப்படி ?

முதல் படத்தில் காட்டியுள்ளது போலத் தனித் தனியாக அட்டைகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும். எட்டு துண்டுகளிலும் ஓட்டை போட்டு, உருவத்திற்கு ஏற்றவாறு வண்ணம் தீட்டிக் கொள்ளவும்.

பொம்மையின் கைத் தோள்பட்டையில் இரண்டு, தொடையில் இரண்டு, முழங்காலில் இரண்டு என ஆறு இடங்களில் துளைகள் போடப்பட்டு, அதற்குரிய பகுதிகளை வைத்து மடக்கி விடும் ஆணியால் இணைத்து விடவும். இணைத்த கையும் காலும் எளிமையாக மேலும் கீழும் அசையுமாறு பார்த்துக் கொள்ளவும். அவ்வாறு அசையாமல் இறுக்கமாக இருந்தால் ஆணியைத் தளர்த்தி எளிமையாக அசையுமாறு செய்யவும்.

பொம்மையின் நடுவில் ஒரு உருண்டையான குச்சியைப் படத்தில் காட்டியுள்ளபடி இணைத்துக் கொள்ளவும். குச்சி அட்டையோடு நன்றாக இணைந்திருக்குமாறு கட்டிவிடவும்.

பொம்மையின் முகம், உடல், கை, கால், இடுப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு வண்ணம் தீட்டி அழகுபடுத்தவும். இப்பொழுது ஆடும் பொம்மை அணியமாகிவிட்டது.

இப்பொழுது குச்சியைக் கையில் பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் உருட்டினால், பொம்மையின் கையும் காலும் மேலெழும். கை வணக்கம் போடும், கால் துள்ளிக் குதிக்கும், நடக்கும், பொம்மையின் இந்த அசைவு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மழலையர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து உருட்டச் செய்தால் அதன் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு வியப்பூட்டுவதாக அமையும். செய்து மகிழ்வூட்டவும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278