கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 52

உல்லன் நூலில் பொம்மைகள் ஆக்குதல்

3 அங்குல அகலமும், 6 அங்குல நீளமும் உடைய அட்டையை எடுத்துக் கொள்ளவும். அதன் மீது படம் 1 இல் காட்டியுள்ளபடி, உல்லன் நூலினை ஒன்றன்மேல் ஒன்றாகச் சுற்றவும். 30 சுற்றுக்குக் குறையாமல் சுற்றவும்.

படம் 2 இல் காட்டியுள்ளபடி மேல் பகுதியில் வேறு வண்ண உல்லன் நூலால் முடிச்சுப் போடவும். இது தலையிலுள்ள ரிப்பனாக அமையும்.

பிறகு படம் 3 இல் காட்டியுள்ளபடி வலது, இடது புறத்தில் சம எண்ணிக்கையுடைய சுற்றுகளைப் பிரித்து வெளியே எடுக்கவும். 5, 6 சுற்றுகள் எடுத்தால் போதுமானது. இது கையாக அமையும். கீழ்பகுதியில் வேறு வண்ண உல்லன் நூலால் முடிச்சுப் போடவும். இது மணிக்கட்டுடன் சேர்ந்த விரல்போல அமையும்.

அடுத்து படம் 4 இல் காட்டியுள்ளபடி தலைக்காக ஒரு முடிச்சுப் போடவும். முடிச்சு கழுத்துப் பட்டி போல அழகாகப் போடவேண்டும். இப்பொழுது கைக்காகப் பிரித்து எடுக்கப்பட்ட 5,6 உல்லன் நூல்களைத் மேலே இழுக்கவும். தலை வட்ட வடிவமாக இருக்கும் வரை மெதுவாக இழுத்துச் சரி செய்யவும். இப்பொழுது தலை கோளவடிவமாக மாறி அழகாகத் தோற்றமளிக்கும். இது போலவே நெஞ்சுப் பகுதியையும் சரி செய்யவும். உருளை வடிவமாக அழகாக வரும் வரை நெருக்கி அழுத்தவும்.

இறுதியாக படம் 5 இல் காட்டியுள்ளபடி கீழ்பகுதியை வெட்ட தனித்தனியாக இருக்குமாறு செய்யவும். சரியான தோற்றம் வரும் வரை முடிச்சுகளோடு சேர்த்து உருட்டி அழுத்தவும். இப்பொழுது அழகான உல்லன் நூலில் செய்த இரண்டு வண்ணமுடைய பொம்மை கிடைக்கும்.

செய்து பார்த்து மகிழ வாழ்த்துகள்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278