கல்வி ஆராய்ச்சிகள்
வரிசை எண் : 50
விந்தைச் சதுரங்கள் உருவாக்குவோமா?
3 X 3 பெட்டிகளுள்ள 9 சதுரங்களில் எந்தப் பகுதியிலுள்ள மூன்று சதுரங்களில் உள்ள
எண்களைக் கூட்டினாலும் ஒரே எண் வரவேண்டும். இதுபோல 5 X 5, 7 X 7, 9 X 9 என்கிற எண்ணிக்கையில்
உள்ள பெட்டிகளின் எண்களைக் கூட்டினாலும் ஒரே எண் வரவேண்டும். இதுபோன்று உருவாக்கப்படும் சதுரங்கள்
தான் விந்தைச் சதுரங்கள் எனப்படும்.
இதை எளிய முறையில் உருவாக்கக் கீழே விளக்கம் தரப்பட்டுள்ளது. முதல் படத்தில் 1 லிருந்து 9 வரையுள்ள
எண்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிற கட்டங்களைப் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்
கூட்டுத்தொகை 15 ஆக இருக்கும்.
இதுபோன்ற கட்டங்களை உருவாக்க எளிமையாக படம் 1இல் உள்ளது போலக்
கட்டத்தை வரைந்துகொண்டு வரிசையாக எண்களை எழுதவேண்டும். இடைக் கட்டங்களில் எண்களை
எழுதக்கூடாது. இப்படி வரிசையாக எழுதிய பிறகு, 3 X 3 சதுரங்களுக்கு வெளியிலுள்ள எண்களை உள்ளே
கொண்டுவரவேண்டும். கொண்டுவரும் முறையானது பச்சை வண்ணத்திலும், சிகப்பு வண்ணத்திலும்
தரப்பட்டுள்ளது.
இதே முறையில் கட்டங்களை வரைந்து, எண்களை எழுதிவிட்டு, பிறகு உள்ளே கொண்டுவர விந்தைச் சதுரங்கள்
அமைந்துவிடும். மூன்றாம், நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும். பயன்படுத்தி
எண்கள் பற்றிய நுட்பத்தை அறிய ஊக்குவிக்கவும்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
|