கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 48

அசையும் படங்களை உருவாக்குவோமா ?

இதனை அப்படியே வரைந்து அல்லது படியெடுத்து வைத்துக் கொள்ளவும். 4 படங்களில் அசையும் தொடர்ச்சியானது தரப்பட்டுள்ளது. 5 ஆவது படத்தில் முதல் படத்தின் நிலையானது காட்டப்படும். ஆக 4 படங்களுக்கு ஒரு அசைவு என இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பந்தடிப்பது என்று எடுத்துக் கொண்டால் அதில் 4 படங்களைப்போல 4 எண்ணிக்கைகளை படியெடுத்து (ஆக 16 படங்கள் கிடைக்கும்) அதனை வரிசையாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்துக் கொள்ளவேண்டும். பிறகு 16 படங்களையும் சரியாக ஒன்றன்மேல் ஒன்று பொருத்திய பிறகு நகராமல் இருக்க ஊசி கொண்டு தைக்கவோ பின் அடித்தோ புத்தகம் போல ஆக்கிக் கொள்ளவேண்டும்.

இப்பொழுது முதல் தாளிலிருந்து 16 ஆவது தாள்வரை வேகமாகப் புரட்டினால் ( கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து வேகமாகப் பிரித்தால்) உள்ளே வரைந்துள்ள படம் நகருவதுபோலத் தெரியும். இந்த அடிப்படையில்தான் திரைப்படங்களும் அனைத்து நகரும் படங்களும் உருவாக்கப்படுகின்றன. ஒரு படத்தின் மீது அடுத்தபடம் வேகமாகத் தெரியும் பொழுது கண் படத்தினைத் தனித்தனியாகக் காணாது தொடர்ச்சியாகக் காணுகிறது. எனவே அசைவதுபோலத் தோன்றுகிறது.

செய்து பார்த்து மகிழவும்.


1) பந்தடிப்பது 2) மீன் நகருவது 3) சக்கரம் சுழல்வது 4) சக்கரம் ஓட்டுவது 5) நடப்பது என ஐந்து வகையான அசையும் படங்களுக்கான அடித்தளமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278