கயிற்றில் முடிபோட்டுக் கழுத்தில் அழகாகக் கட்டலாமே.
படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு ஆணியை அடித்து அதில் ஒரு கயிற்றைக் கட்டிவிடவும். பிறகு படத்தில் காட்டியுள்ளது போல இரண்டு கயிற்றை அரை முடிச்சு போடவும். படத்தில் உள்ளது போலப் போட்டுப் பழகவும்.
படம் இரண்டில் இரண்டு படங்கள் உள்ளன. ஒன்று வலது புறமுள்ள கயிறை மேலாகவும், அடுத்ததில் வலது புறமுள்ள கயிறை கீழாகவும் எடுத்து - இடது புறமுள்ள கயிற்றில் முடிச்சு விழும் வகையில் முடிச்சுப் போடவும். நடுவில் இரண்டு கயிறு வருமாறு இருக்க வேண்டும். படத்தை ஒப்பு நோக்கி முடிச்சுப் போட்டுப் பழகவும்.
மூன்றாவது படத்தில் மேலே கூறியுள்ளவாறு போடப்பட்ட முடிச்சுகளைத் தொடர்ச்சியாகப் போட்டு வருவதால் பட்டையான, அழகான, படத்தில் காட்டியுள்ளது போல முடிச்சுகளையுடைய கயிற்றுப் பட்டை கிடைக்கும். ஆணியிலிருந்து கயிற்றை எடுத்து கழுத்தில் கட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெவ்வேறு வண்ணமுடைய தடிமனான நூல் கயிற்றில் இவ்வாறு செய்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278