கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 43

விரும்புகிற உருவங்களைச் செய்து மகிழ்வோம்

(களிமண்ணால் உருவங்கள் செய்வதை முன்பே நாம் பார்த்திருக்கிறோம். களிமண்ணுக்கு மாற்றாக மைதா மாவினால் பொம்மைகள் செய்யும் முறையை நாம் இங்கு காணலாம். இரும்புக் கடைகளில் பிளாஸ்டோசீன் என்ற பொருள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தியும் பொம்மைகள் செய்யலாம். விலை கொஞ்சம் அதிகம்.)

தேவையானவை
1. ஒரு கோப்பை மைதா மாவு
2. முக்கால் கோப்பை குளிர்ந்த நீர்
3. ஒரு கோப்பை உப்பு

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, பாத்திரத்தை இளம் சூட்டில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக, மேலேயுள்ள பொருள்களைப் போட்டு கிளரிக் கொண்டே இருக்கவேண்டும். கிளருவதற்குக் கடினமாக வரும் பொழுது, இளம் சூடுடைய இந்தக்கலவையை பாலிதீன்தாளுக்கு மாற்றி ஆறவிடவும். நன்கு ஆறியதும், உருவங்கள் செய்யத் தயாராகிவிடும். இரண்டொரு நாள்களில் கலவை கெட்டியாகிவிட்டால், சில சொட்டுத் தண்ணீர் விட்டுப் பிசைந்தால் பழைய நிலையை அடையும், எளிதாக உருவங்கள் செய்யலாம். உருவங்கள் செய்த பிறகு காயவைத்து வண்ணம் தீட்டலாம்.




www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278